24 special

என்னய்யா சொல்றீங்க இத்தனை ஆயிரம் இளைஞர்களா...?அதுவும் தினமுமா? - பறந்த ரிப்போர்ட், அதிர்ந்த சூரிய கட்சி..!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

அண்ணாமலை அவர்கள் தலைமையின் கீழ் ஜூலை 28ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு குறிப்பாக 225 ஊர்களுக்கு என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ராமேசுவரத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளாா். விரைவில் புண்ணிய பூமியாம் ராமேஸ்வரத்தில், வரும் தொடங்கவிருக்கும் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் குறித்த முதற்கட்ட பயண விவரங்கள், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன்னார், நாயினார், எச். ராஜா மற்றும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள், துரைசாமி, சக்கரவர்த்தி நடைபயண பொறுப்பாளர் நரேந்திரன் மற்றும் துணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் சென்னையில் நேற்று பத்திரிக்கை யாளர்களை சந்தித்து என் மண் என் மக்கள் நடை பயணம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார்கள். 


பத்திரிக்கையாளர் சந்திப்பின் முடிவில், தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் புகார் பெட்டியை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தினர். என் மண் என் மக்கள் யாத்திரையில் இணைவீர் என்றும், #enmann enmakkal என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பாஜக தரப்பில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது. 

அது மட்டுமல்லாது இந்த ஒரு நடைப்பயணம் நிகழ்வின் போது இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் அண்ணாமலை அவர்கள் தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து இணைய இருக்கும் இளைஞர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக என் மண் என் மக்கள் யாத்திரை குழுவினர் 1800-315-7225 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த எண்ணிற்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் பொழுது அண்ணாமலை அவர்களின் வாய்ஸ் ரெக்கார்டு பின்னணியில் சில கேள்விகளை கேட்கும் அவருடைய யாத்திரையில் நீங்கள் இணைய தயாரா என்று முடிவிற்கு பதிலை கூறிவிட்டு உங்களை இதில் இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5,000 அதிகமான தொலைபேசி அழைப்புகள் இதில் வருவதாகவும் பாஜக தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு நடை பயணமாக என் மண் என் மக்கள் யாத்திரை அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தகவல்கள் தெரிவிக்கின்றன

பொதுவாக கட்சி நபர்களின் நடைபயணம் அல்லது பாதுகாப்பை தொடர்பான நிகழ்வுகளில் கட்சி நபர்கள் அல்லது அந்த குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்று பொதுவான கருத்து இருந்து வந்தது.ஆனால் தற்போது இந்த கருத்து முறியடிக்கப்பட்டு என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தில் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது கட்சியை சாராத பிற சாமானிய லட்சக்கணக்கான எளிய பின்புல இளைஞர்களும் தங்களை இந்த ஒரு யாத்திரை பயணத்தில் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா பிற கட்சிகளில் இருக்கும் நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் கூட அண்ணாமலை அவர்களின் இந்த நடைப்பயண யாத்திரையில் பதிவு செய்து இருக்கிறார்கள் என்ற தகவலை கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன!