பாஜகவின் மைனாரிட்டி மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் மற்றும் வேலூர் இப்ராஹிம் இருவரையும் தர்காக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதி மறுப்பது தான் ஜனநாயகமா?
என்றிலிருந்து தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருக்கும் முஸ்லிம் தர்காக்குள் சென்று தொழுகை நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது? இதுதான் தமிழ்நாட்டு முதல்வர் சொல்லும் திராவிட மாடல், சமூக நீதியா ஜனநாயகமா என்று அதிரடியாக அண்ணாமலை கேள்வி கேட்டு மேலும்
காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும் தமிழக பாஜகவின் தொண்டரான அண்ணன் திரு செம்புலிங்கம் அவர்கள் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிரிழந்த அண்ணன் செம்புலிங்கம் அவர்களின் மகன் திரு மணிகண்டன் அவர்களை இன்று திருச்சியில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் செம்புலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்
உயிரிழந்த செம்புலிங்கம் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். உயிரிழந்த செம்புலிங்கம் மகனான மணிகண்டன் அவர்களிடம் காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.
இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை அரியலூர் மாவட்டத்தில், உயிரிழந்த திரு செம்புலிங்கம் அவர்களுக்கு நீதி கேட்டு, திறனற்ற திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்று காட்டமாக அண்ணாமலை கூறியுள்ளார்.