24 special

குட்டையை குழப்பி விட்ட பாண்டே... கடைசியில் இப்படி சொன்னா என்ன செய்வது?

Annamalai ,pandey
Annamalai ,pandey

1967- க்கு பிறகு தேசியக் கட்சிகளை எங்கள் முதுகில் சுமந்து தான் எம்பிக்களாகவும் எம்எல்ஏக்களாகவும் இருக்கின்றன  என்று மேடைக்கு மேடை இரு கழகத்தினரும் இதற்கு முன் பல மேடைகளிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கூறி இருப்பது தமிழக மக்கள் அறிந்ததே. 


மேலும் கொள்கை வேறு கூட்டணி வேறு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இணைந்திருக்கிறோம் என்றும் தேசிய கட்சிகளும் தன் பங்குக்கு தங்கள் கட்சி வளர கூறுவது வழக்கம். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின் காட்சிகள் மாறி திராவிடத்தை வேரறுப்போம் என்று அவரும்,  பாஜகவினரும் மேடைக்கு மேடை  ஒரு புறம் சொல்லி வந்தாலும், இன்னொரு புறம் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு எப்படி திராவிடத்தை எப்படி வேரறுக்க  முடியும்  என்ற கேள்வி மக்கள் மத்தியிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுந்திருக்கும் நிலையில்  2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தொண்டர்கள் அண்ணாமலை தலைமையின் கீழ் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் பரவலாக பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிற சூழ்நிலையில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், மேடைக்கு மேடை நாங்கள் பாராளுமன்றத்தில் 25 தொகுதிகள் வெல்வோம் என்று கூறி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில். நெறியாளர், எப்படி இருந்தாலும் அதிமுகவுடன் நாலைந்து சீட்டுக்கு நிற்கத்தானே  போகிறீர்கள், எப்படி 25 சீட்டு?  என்ற கேள்விக்கு உங்களுக்கு கிரவுண்ட் லெவல் பாலிடிக்ஸ் தெரியலன்னா, என்னுடன் கொஞ்சம் வந்து பாருங்கள்? தொண்டர்கள் எழுச்சி மற்றும் மக்களின் எழுச்சி எப்படி இருக்கிறது என்று தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் காட்டுகிறேன் என்று கூறினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒரு மணி நேரம் தனிமையில் ஆலோசித்ததாகவும், பிறகு பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து வந்தபின் தமிழக பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம், 2024 பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க போவதாகவும், கட்சிக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில்.........

சமீபத்தில் பிஜேபியின் திங்கர் செல் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் பிரபல மூத்த ஊடகையாளர் பாண்டே தமிழ்நாட்டு அரசியலில் அதிர்ச்சி வைத்தியமாக வந்திருக்கிறார் அண்ணாமலை, என்ன செய்யப் போகிறார் என்று கட்சிக்குள்ளும் தெரியவில்லை கட்சிக்கு வெளியேவும் தெரியவில்லை என்று பாஜக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை தன்  பாணியில் கிளறி விட்டு பேச்சை ஆரம்பித்தவர்.

1991லிருந்தே இங்கு ஒரு வெற்றிடம் உள்ளது, யாராவது வந்து நிரப்ப மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிய நிலையில், ரஜினியும் ஆம் இருக்கிறது என்று சொல்லி, அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வராமல் போன பிறகு, நிஜ அண்ணாமலையே வந்திருக்கிறார் என்று புகழ்ந்தவர்.

பிறகு மோடி என்றால் தமிழகத்திற்கு யார் என்று தெரியாமல் இருக்கும் பொழுது ஜெயலலிதா மோடி லேடியா என்று கேட்ட பொழுதே, பாஜக தனித்து நின்று 18 சதவீதம் ஓட்டு வாங்கியது என்று கூறி, இப்பொழுது பாஜக இருக்கும் நிலைமையில் 25 சதவீதம் ஓட்டாவது வாங்க வேண்டும், இல்லனா மேல இருக்கவனுக்கு பதில் சொல்லணும்....... என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்யாத சாதனையை எடப்பாடி செய்துள்ளார் என்றும், அவர் தூக்கின விக்கெட் எல்லாமே பெரிய விக்கெட் தான், சசிகலா தினகரன் ஓபிஎஸ் என்று நான் அடிச்சா ஆள் எல்லாமே பெரிய ஆள் தான்டா என்ற ரீதியில் எடப்பாடியை  புகழ்ந்தும் , இன்னொரு புறம் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்யாத சாதனையை ஸ்டாலின் கூட்டணிகைக் கட்சிகளை வைத்திருப்பதில் மு க ஸ்டாலினை புகழ்ந்தும்.


பிறகு 2014 தேர்தலில் இருந்து புள்ளி விவரத்துக்கு சென்றவர்..... 2024 இமும் முனை போட்டி ஏற்பட்டால்  ஒரு பக்கமமாக திமுகவுக்கு தான் சாதகமாக ஆகிவிடும் என்று சொல்லி, இன்று இமாச்சலில், டெல்லியில்  கூட்டணி இல்லாததால் மோடிக்கே ஒரு சின்ன சறுக்கல்  என்று சொல்லி  அண்ணாமலையை மட்டுமல்லாமல் பாஜக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தார்.


அவரது அரை மணி நேரம் பேச்சில், எல்லோரையும் தன் பாணியில் ஒருபுறம் புகழ்ந்தும் ஒருபுறம் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிம் பேசிய பேச்சு..... பாஜக தொண்டர்கள்,  மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது. 

பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர்ராஜ சோழன் மும்முனை போட்டி நடந்ததால் 2014 ல் அதிமுக 37 தொகுதிகளை வென்றது அதனால் இப்போதும் மும்முனை போட்டி வந்தால் தீர்ப்பு ஒரு பக்கத்திற்கு சாதகமாகப் போகும்,அது திமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்பது தவறான அரசியல் பார்வை.

2014 ல் நடந்தது மும்முனையல்ல,நான்கு முனையாகும்.திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைத்துக் கொண்டது புத்திசாலித்தனமான செயல்பாடல்ல.திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்திருந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை அன்றே அதிமுக பெற்றிருக்க முடியாது..2016 ல் எப்படி பலமான போட்டியை திமுக+காங்கிரஸ் கொடுத்ததோ,அதையேதான் 2014 லும் கொடுத்திருக்கும்..

ஆனால்,2014 ல் காங்கிரஸ் கூட்டணியை கழட்டிவிடக் காரணமே திரு.ஸ்டாலின் என்றே தோன்றுகிறது.அதற்கு காரணம் கூட்டணியில் இருந்து கொண்டே ராஜா - கனிமொழியை கைது செய்தது,2011 ல் தங்களை அச்சுறுத்தி அதிக சட்டமன்ற தொகுதிகளை பெற்றதற்கு பாடம் கற்பிக்கவே இதை செய்திருக்க வேண்டும்..அடுத்தது,திமுகவை தான் கைப்பற்ற டெல்லியில் லாபியிருக்கும் உட்கட்சி சக்திகளை மட்டுப்படுத்த இதை அவர் செய்ததாகவும் பார்க்க முடிகிறது..நிற்க.

2014 ல் நான்கு முனை போட்டியில் அதிமுக 37 தொகுதிகளை வென்றது என்றால்,2019 ல் இருமுனை போட்டியில் திமுக+காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளை வென்றது எப்படி?நான்கு முனை போட்டியில் 18% வாக்குகளையும்,2 தொகுதிகளையும் வென்றெடுத்த NDA கூட்டணிக்கு இருமுனை போட்டியில் 2019 ல் கிடைத்த லாபமென்ன?பாஜகவிற்கு அதிக தொகுதிகளை தரக்கூடாது,அது அதிக சதவிகித்தத்தை பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்திற்கு பெயர் திமுக எதிர்ப்பு என்று முலாம் பூசி மகிழ வேண்டுமா?

ஜெயலலிதா - கருணாநிதி இல்லாத தமிழகத்தில் பலமான பிரதமர் முகம் நரேந்திர மோடி மட்டுமே.அவருக்கு நிகராக செல்வாக்கு கொண்ட இன்னொரு தலைவர் இல்லை.நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்ற நோக்கத்தோடு யார் வந்தாலும் இணைத்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டணியை போட பாஜக தயாராக உள்ளது..

2024 யை பொறுத்தவரை பாஜக உறுதியாக பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெறும்.அதற்கு தமிழகம் அமைச்சர்களை தரப்போகிறதா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்..பாஜக இருக்கிற கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் செய்யவே அண்ணாமலை இங்கு தலைவராகியுள்ளார்.அதில் மட்டுமே பாஜக கண்ணும் கருத்துமாக இருக்கும். என்று பல கேள்விகளை எழுப்பியவர்.

மேலும் பாஜக இல்லாமல் இனி திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக,கட்சியை அடமானம் வைக்க வேண்டும் என்று பேசப்படும் ஒரு வார்த்தையைக் கூட, பாஜக தலைமை இனி காதில் வாங்கிக் கொள்ளாது..

உண்மையான திமுக எதிர்ப்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன? எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாத விதம் பாஜக பின்னால் அணிசேர்ப்பு நடத்த பிறருக்கு ஆலோசனை சொல்வதை மட்டும  என ஆணித்தரமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழக பாஜக தொண்டர்களும் இவர் பாஜகவை புகழ்கிறாரா? ஸ்டாலினை புகழ்கிறாரா அல்லது அதிமுகவின் எடப்பாடியை புகழ்கிறாரா?  கமலஹாசன் போல  என்ன ஒரு குழப்பமான பேச்சு ? என்று ஒரு பக்கம் தங்கள் சகசலப்பை காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அவரது பேட்டியில் தவறு செய்யாத பொழுது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உறுதியாக நின்றவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. என்ன குழப்பி நடுவில் மீன்பிடிக்க நினைத்தாலும் , அதில் சிக்காமல் ,  உறுதியாக  2024 தேர்தலில் அண்ணாமலை பாஜக தலைமையிலான கூட்டணியை அமைப்பார் என்று உறுதியாக கூறுகின்றனர். 

மேலும் ஒட்டுமொத்த திராவிடத்தையும் வேரறுக்க , வேட்டையாட வந்திருக்கும் சிங்கத்திற்கு அட்வைஸா?  என்றும். தமிழகத்தில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. மோதிப் பார்க்க வேண்டியதுதான் என்றும் சோசியல் மீடியாக்களில் தங்கள் கருத்துக்களை உறுதிப்பட சொல்லி  வருகின்றனர்.

இன்னொரு புறம் ஊடகவியலாளர்களும்,  நடுநிலை பொதுமக்களும் திமுக வரக்கூடாது என்ற நிலையிலிருந்து,  நடுநிலை நடுநிலை என்று சொல்லி எடப்பாடி பக்கம் சாய்கிறாரோ ? எடப்பாடியின் அதிமுக பாஜக கூட்டணிக்கு அடி போடுகிறாரா என கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவை வீழ்த்த வேண்டிய பொறுப்பு பாஜகவிற்கு இருக்கிறது அதற்காக அதிமுகவிடம் தன் மானத்தை அடகு வைத்து தேர்தலை பாஜக நிச்சயம் எதிர்கொள்ளாது என்பதே தற்போதைய பாஜக அரசியலை உற்று நோக்குபவர்களின் கணிப்பாக உள்ளது.