ஹரி நாடரை கைது செய்ய அனுமதி கேட்ட தமிழக போலீசார் சீமானை சிக்க வைக்க வியூகமா?Hari nadar vijayalakshmi and seeman
Hari nadar vijayalakshmi and seeman

கர்நாடக மாநில சிறையில் இருக்கும் ஹரி நாடாரை கைது செய்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக போலீசார் கடிதம் எழுதி இருக்கும் சம்பவம் கடும் அதிர்வலைகளை நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் உண்டாக்கியுள்ளது. தமிழில் ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம்பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோமூலம் குற்றசாட்டு சுமத்தி வந்தார்.

இந்நிலையில், சீமானின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று கூறி, முகநூலில் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, 2020 ஜூலையில் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் நேரடி வாக்குமூலம் வாங்கினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார். உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி வலியுறுத்தினார். இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தார்.

இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீஸார் தற்போது மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். வழக்கு ஒன்றில் கைதாகி,பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹரி நாடாரை கைது செய்து விசாரணை செய்வதன் மூலம் சீமானுக்கு செக் வைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், சீமான் தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை சிறையில் அடைக்கும் வகையில் முதலில் ஹரி நாடாரை கைது செய்து பின்பு சீமான் பக்கம் திரும்பும் முயற்சியில் தமிழக காவல்துறை இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out