பிரதமர் குறித்து அவதூறாக பேசிவிட்டு பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பஸ்சில் வைத்தே பெண்கள் வெளுத்து எடுத்து சம்பவம் பரபரப்பை உண்டாகியுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் பஸ்சில் செல்லும் போது பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதுடன் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட நபரை பெண்கள் பஸ்சிலிருந்து கீழே தள்ளி, சரமாரியாக உதைத்தனர்.
மைசூரு நகரின் பஸ் நிலையத்திலிருந்து, மேடகல்லி வழியாக பஸ் சென்றது. பஸ்சில் இருந்த நபரொருவர், பெண் பயணியரை கேலி செய்து தொந்தரவு கொடுத்தார். குறிப்பாக பெண்களின் திருமண வயது 21 என்பதாக உயர்த்துவது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்தர மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார்.
இதை பெண் பயணியர் கண்டித்தனர். கண்டித்த பயணிகளை அவர்களை கொலை செய்வதாக மிரட்டினார்.கோபமடைந்த பெண்கள், அந்நபரை பஸ்சிலிருந்து கீழே தள்ளி அடித்து துவைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பெண்களின் தைரியத்தை பலரும் பாராட்டினர். அந்நபர் மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கேதும் பதிவாகவில்லை.
இந்த நிலையில் இந்த வீடியோவை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உண்மைக்கு புறம்பாக சுந்தரவள்ளி போன்ற பெரியாரிஸ்ட் பலர் பிரதமர் மீது அவதூறாக பேசியுள்ளனர் குறிப்பாக இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறாக பேசிய சுந்தரவள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சூழலில் இது போன்ற நபர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
திராவிட நாடு என தென் இந்தியாவை வகைப்படுத்தும் நபர்கள் அதே திராவிட நாட்டின் ஒரு பகுதியான கர்நாடகாவில் வைத்து பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நபரை வெளுத்து எடுத்த சம்பவம் பெரியாரிஸ்ட்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.