மதமாற்ற தடை சட்டம் தமிழகத்தில் கொண்டு வந்ததால் ஜெயலலிதா தோற்றார் என சமூக வலைத்தளங்களில் சிலர் சொல்லிவரும் நிலையில் உண்மை என கருத்து தெரிவித்துள்ளார் சமூக வலைத்தள எழுத்தாளர் சுந்தர ராஜ சோழன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்ததால் 2004 - 2006 ல் செல்வி.ஜெயலலிதா தோற்றார் என்பது அபத்தமான கருத்து இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் தோற்க காரணம் தேர்தல் யுக்தி மற்றும் கூட்டணிதான்தன் மீது அதீதமான நம்பிக்கை வைத்து கூட்டணிகளை கழட்டி விட்டது மற்றும் விஜய்காந்தை குறைத்து மதிப்பிட்டது தவறு.
2001 ல் திரு.கருணாநிதி என்ன பிழை செய்தாரோ அதையே அட்சரம் மாறாமல் 2004/2006 ல் செல்வி.ஜெவும் செய்தார். 1998 ல் பாஜக + பாமக + மதிமுக என்ற புதிய கூட்டணியை உருவாக்கி அதை தமிழகத்தில் வெற்றி சூத்திரமாக மாற்றிக் காண்பித்தவர் செல்வி.ஜெதான்.இதையே 1999 ல் திரு.கருணாநிதியும் பின்பற்றினார்.
பின் 2001 ல் திமுக பாஜக கூட்டணிக்கு எதிராக தமாக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் என பெரிய மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கினார் செல்வி.ஜெ.இதுவும் வெற்றிகரமான பாதையாக மாறியது.. 2002 ல் மதசார்பற்ற சட்டம் கொண்டு வந்தார் செல்வி.ஜெ. 2004 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்கு 29.8% வாக்குகள்,திமுக பெற்ற வாக்குகள் 24.6% வாக்குகள்.
ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ்+பாமக+மதிமுக+இரண்டுகம்யூனிஸ்ட்டுகள் என பிரமாண்ட கூட்டணி உருவாகியிருந்தது.ஆனால் அதிமுகவோடு 5% ஓட்டு வாங்கிய பாஜக மட்டுமே இருந்தது.
2001 ல் தனக்கு பின்னால் நின்ற கட்சிகளை சரிகட்டி 2004 லும் உள்ளே இழுத்திருக்க வேண்டும் அதிமுக.அதே போல அத்வானியும் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.எல்லோருமே தப்பு கணக்கு போட்டு பலமான திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் தோல்வி கண்டனர்.
2006 ல் விஜய்காந்த் களத்துக்கு வந்துவிட்டார்.அவரும் திமுக எதிர்ப்பை பேசி அதிமுக இடத்தையே காலி செய்தார்.போதாதற்கு அதிமுக கூட்டணியில் கோட்டை விட்டது.மதிமுக+விசிகேவை மட்டும் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் Sweep அடித்த கூட்டணியை எப்படி வெல்ல முடியும்? 2006 தேர்தலிலேயே விஜய்காந்தோடு கூட்டணிக்கு போயிருந்தால் அதிமுக அப்போதே தோற்றிருக்கும் வாய்ப்பு குறைவுதான். ஆகவே, political arithmetic-ல் தான் அதிமுக தோற்றதே அல்லாமல் மதமாற்றத் தடைச்சட்டமெல்லாம் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளார் சோழன்.
More watch videos