Tamilnadu

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது "லாவண்யா" விவகாரத்தில் யாரும் எதிர்பாராத திருப்பம்..!

lavanya
lavanya

அரியலூரை சேர்ந்த தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் பல அதிரடி திருப்பங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிய நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது, இது குறித்து தகவல்களை பார்க்கலாம்.


1, சிறுமி தங்கியிருந்தது மைக்கேல் பட்டி தூய இருதய பள்ளியின் விடுதியில் (ஹாஸ்டலில்) இல்லை. 'புனித மைக்கேல் குழந்தைகள் இல்லம்' (St.Michael Home for Children ) எனும் அனாதை இல்லத்தில் அதன் உரிமமும் சென்ற வருடமே காலாவதியாகி, புதுக்கிப்படாமல் இருக்கிறது. 

a, பெற்றோர் இல்லாத குழந்தைகளையே 'அனாதை' இல்லத்தில் சேர்க்க வேண்டும். பெற்றோர் இருக்கும் சிறுமியை எப்படி இங்கே சேர்த்தது பள்ளி?  அந்த என்.ஜி.ஓ விடுதிக்கும் பெற்றோரிடம் கட்டணம் வாங்கியிருக்கிறது பள்ளி. நன்கொடையில் இயங்கும் என்.ஜி.ஓ, கட்டணம் எப்படி வசூலிக்கலாம்? 

உரிமம் காலாவதியான பிறகும் எப்படி அதை இயக்கினார்கள் கத்தோலிக்கர்களின் 'ஆசிய செய்திகளின் ஒன்றிய' (UCA - Union of Catholic Asian News) வலைதளத்தில், 'கும்பகோண மறை மாவட்டத்தில்' இயங்கும் அனாதை இல்லங்களில் இந்த 'குழந்தைகளுக்கான புனித மைக்கேல் இல்லம்' (St Michael's Home for Children)' விவரங்கள் பகிரப்பட்டு இதை உறுதி செய்கிறது.

பெற்றோர் இருந்தும், அவர்களை 'அனாதைகளாக' காட்டி, அந்த 'அனாதை' குழந்தைகளை மதமாற்றம் செய்ய நன்கொடை தரவும்" என்று வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவது இந்த இல்லங்களை நடத்துபவர்களின் திருட்டுத் தனம். மத(வெறி) தெரசாவின் 'அனாதை' இல்லத்திலும் இம்மாதிரி பல முறைகேடுகள், பாலியல் கொடுமைகள். தெரசா இல்லத்திலிருந்து குழந்தைகளை விற்றதால் அதன் உரிமத்தை புதுப்பிக்க மறுத்தது மத்திய அரசு. 'குழந்தைகளை விற்றவரை நிர்வாகத்திலிருந்து துரத்தி விட்டோம்' என்று கூறி உரிமத்தை புதுப்பித்துள்ளது தெரசா இல்லம். துரத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணம் பெறும் உரிமத்தை காக்க கூட்டாளியை கூப்பில் ஏற்றிய தெரசா இல்லம் 2014 முதல் இம்மாதிரியான பல 'இல்லங்கள்' மூடப்பட்டுள்ளன  இந்த மைக்கேல்பட்டி அனாதை இல்லத்துக்கு வாட்டிகனும் பணம் கொடுத்ததாக தெரிவிக்கிறது

அடுத்து… சித்தி கொடுமைப்படுத்தியதாக அரியலூர் சைல்டுலைனுக்கு (Childline) ஃபோன் வந்த விவகாரத்திலும் பல தில்லுமுல்லுகள்! இந்த அரியலூர் சைல்டுலைன் என்பது ஒரு என்.ஜி.ஓ. அது அரசு அமைப்பில்லை.

'சைல்டுலைன் இந்தியா அறக்கட்டளை' (Childline India Foundation) என்ற வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓ (FCRA-NGO MH/83780693) இந்தியாவெங்கும் 1098 தொலைபேசி எண்ணை இயக்குகிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்த அமைப்பு, 'கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை சங்கம் (Kumbakonam Multi-purpose Social Service Society - KMSSS) மற்றும் கிராமப்புற கல்வி மற்றும் செயல் மேம்பாடு (Rural Education and Action Development READ) ஆகிய இரு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கிராமப்புற கல்வி மற்றும் செயல் மேம்பாடு அமைப்பு என்பது ஒரு கிறிஸ்தவ என்.ஜி.ஓ. அது மட்டுமல்ல, 'கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை சங்கம்' KMSSS எனும் 'மத   அமைப்பு' , வெளிநாட்டில் பணம் வாங்குகிற என்.ஜி.ஓ. இந்த சங்கத்தை இயக்குவது கும்பகோணம் மறை (Diocese)!!!! 

சிறுமி படித்த தூய இதய பள்ளியும், தங்கியிருந்த அனாதை இல்லமான புனித மைக்கேல் இல்லமும் இதே கும்பகோணம் Dioceseஐ சேர்ந்தவை, அதாவது… சைல்டுலைன், தூய இதய பள்ளி, மைக்கேல் இல்லம் - அத்தனையும் கும்பகோண Diocese கீழே வருபவை. Diocese தலைவர்: பிஷப் அந்தோணிசாமி. 

எனவே…. அந்த குறிப்பிட்ட பள்ளியில் படித்த மாணவி, குறிப்பிட்ட இல்லத்தில் இருந்த மாணவி, குறிப்பிட்ட சைல்டுலைனுக்கு போன் செய்தார் என்பது கிரிமினல் கான்ஸ்பிரஸி என்றே படுகிறது.  விவகாரம் சிபிஐ வசம் போயிருப்பதால், மதமாற்ற முயற்சி மட்டுமில்லாமல், கிரிமினல் கான்ஸ்பிரஸி, வெளிநாட்டு பணம், அமலாக்க பிரிவு என பெரிதாக போக வாய்ப்பு உள்ளது.( source செல்வநாயகம்.)

More watch videos