24 special

புகார் பெட்டியில் இவ்வளோ விஷயம் இருக்கா...?இது தெரியமா போச்சே...!

Annamalai
Annamalai

வருகின்ற ஜூலை 28ஆம் தேதியிலிருந்து தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரப் போகிற முக்கிய நிகழ்வாக எம் மண் என் மக்கள் பாதயாத்திரை ஏற்பாடு முழுவீச்சில் நடைபெறுகிறது, அண்ணாமலை முன் அறிவித்தபடி, நடைபயணம் துவங்க இருப்பது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையிலே இந்த நடை பயணம் தொடங்க உள்ளது.


தமிழகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நடைபயணமானது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களின் முடியபோவது கிடையாது சுமார் 168 நாட்கள் ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னையில் முடியப் போகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை இந்த பாதயாத்திரை உறுதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. 

ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் பாஜக இதுவரை வளர்ந்திடாத ஒரு உச்சத்தை தற்போது பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடங்க உள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரை பாஜகவிற்கு முழுக்க முழுக்க தேர்தல் வெற்றி வாய்ப்பை பெற்று தரும் நிலையையே ஏற்படுத்திக் கொடுக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மேலும் இந்த பாதையாத்திரையில் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எங்கும் புகார் பெட்டி ஒன்றை எடுத்துச் செல்லப் போவதாகவும் பாஜக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்த புகார் பெட்டியில் மக்கள் தங்கள் குறைகளை எழுதி போடவும் அதற்கு உடனடியான முடிவுகள் கிடைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

அதோடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவருமே அண்ணாமலைக்கு முழு ஆசிகள் வழங்கி இந்த பாதயாத்திரை நடத்த சம்மதித்து உதவி புரிவதாகவும் கமலாய வட்டாரங்கள் பெருமையாக சொல்கின்றன.அண்ணாமலையின் நடை பயணத்தின் போது மக்களின் குறைகளை சேகரிக்கும் 'விடியல முடியல' என்னும் வாசகத்துடன் கூடிய புகார் பெட்டி இன்று ஊடகம் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அதில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஊழலற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும் இது அண்ணாமலையின் பாதயாத்திரைக்குப் பிறகு நிச்சயம் நிகழும். பாஜகவின் கூட்டணியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் வெற்றி என்ற இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தினத்திலும் வாகனம், பாதயாத்திரை மூலமாக அண்ணாமலை மக்களை நேரடியாக சந்தித்து உரையாற்ற உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பாஜகவின் தொண்டர்கள் இதற்கு பெரும் ஆதரவு தர காத்திருக்கிறார்கள். அதோடு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு செய்த நலத்திட்டங்களை தாங்கிய புத்தகங்கள் தயாராக உள்ளது அதுவும் மக்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஊர்களிலும் புனித மண் எடுக்கப்பட்டு தமிழ் தாயின் சிலை வடிவமைக்கப்பட உள்ளது, இந்த பாத யாத்திரையின் பொழுது 11 பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் தேசிய தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர். 

என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கட்சிக்கானது அல்ல மக்களுக்கானது என்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொள்ளப்படும் பொழுது மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலையை நேரில் சந்தித்து தங்களது ஆதரவுகளை கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதை அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது தற்போது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக 25 தொகுதிகளில் வென்றே தீருவேன் என்று அண்ணாமலை கூறியது கண்டிப்பாக நிறைவேறும் என்று பாஜக வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றன.