24 special

பொன்முடி விசாரணையில் இணைந்த அடுத்த பிரிவு ...!இனி தான் ஆட்டமே...!

Ponmudi
Ponmudi

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க ஒரு பக்கம் தேர்தல் கூட்டணி குறித்த செய்திகள் பரபரப்பாக மாறி கொண்டு இருக்க மறு புறம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்ச்சியாக அமலாக்கதுறை விசாரணையில் சிக்குவது அதிகரித்து வருகிறது.


செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி ED விசாரணையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பொன்முடி விவகாரத்தில் ED அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறதாம் இதில் PALA🙏🏼முக்கிய இரண்டாம் கட்ட தலைகள் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் விழுப்புரத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.,யுமான கவுதம சிகாமணி வீடு, அலுவலகம், பொறியியல் கல்லுாரி என, ஏழு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடி வீட்டில் இருந்த, கணக்கில் வராத, 81.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.முறைகேடாக சம்பாதித்து, வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக வைத்திருந்த, 41.90 கோடி ரூபாயை முடக்கினர். 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் கரன்சியான பவுண்டுகளையும் கைப்பற்றினர்.இருவரிடமும், 20 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, கவுதம சிகாமணிக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி, வெளிநாட்டு பங்குகளை வாங்கி விற்றதில், 100 கோடி ரூபாய் வரை, ஹவாலா பணம் கைமாறி உள்ளது தெரிய வந்துள்ளது.

பொன்முடிக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடந்துள்ளது. ஆனால், போலிஆவணங்களை தாக்கல் செய்து, முறைகேட்டை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த வழக்கில் சிக்கிய நபர் வாயிலாக, பொன்முடி, கவுதம சிகாமணி ஆகியோர் மோசடி வேலையில் ஈடுபடுவதை நிரூபித்துள்ளனர். அடுத்த கட்டமாக, பொன்முடியின் பினாமிகளான சதானந்தம், ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயசந்திரன், கோபிநாத் ஆகியோரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஐந்து பேருக்கும், 'சம்மன்' அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர்.இவ்வாறு  ED வட்டாரங்கள் கூறுகின்றன.

அமலாக்கதுறை சோதனையை அனுதாபம் தேடும் அரசியல் முயற்சியாக திமுக மாற்ற நினைத்தாக கூறப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் மத்தியிலும் ஏன் ரெய்டு நடத்துவதில் என்ன தவறு யாரிடம் சொத்து இல்லை எல்லா அரசியல் வாதியும் சொத்துக்களை குவித்து வைத்து இருக்கிறார்கள் மத்திய அரசு இன்னும் வீரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கருத்து உருவாகி இருப்பதால் ED விசாரணையை வைத்து அனுதாபம் தேட முயன்றால் அது தங்களுக்கே பின்னடைவாக அமையும் என நினைத்த திமுக ED விசாரணையை விட்டுவிட்டு மணிப்பூர் பிரச்சனையில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறதாம்.

இது ஒருபுறம் என்றால் தற்போது நாடு முழுவதும்  அரசியல் வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றோரின் பினாமிகளை கண்டறிய புதிய படையை சத்தமில்லாமல் மத்திய அரசு  கொண்டுவந்து இருப்பதும் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பலரை கண்கானித்து ஆவணங்களை சேகரித்து இருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.