நாட்டுல் பொருளாதாரம் அரசியல், உள் நாட்டு பிரச்சனை வெளிநாட்டு பிரச்சனை என அனைத்திற்கும் கருத்து மற்றும் குறை கூறுகின்ற முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் தன்னோட குடும்ப சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது குறித்து இதுவரை எந்த பதிலும் கூறாமல் கப் சுப் என்று இருப்பதன் பின்னணி மிக பெரிய அளவில் இருக்கிறது. என்கின்றனர் டெல்லி வட்டாரங்கள்.
ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் எனும் நிதி நிறுவன வழக்கில் பண மோசடி செய்தார் என்ற வழக்கு நடந்து வந்தது, இந்நிலையில் நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியா முடக்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது நாட்டின் முன்னணி ஊடகங்கள் தொடங்கி நாளிதழ்கள் வரை அனைத்திலும் வெளிவந்த பின்பும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் சிதம்பரம்.நாட்டில் நிதி நிலைமை, திடீர் சம்பவங்கள், பிரதமரின் நடவடிக்கைகள், பேரிடர், பட்ஜெட், நாடாளுமன்ற விவகாரம், பாஜக கட்சியோட நிகழ்வு, தமிழ்நாடு அரசியல் ஏன் கமலஹாசன் நடத்துற பிக் பாஸ் தவிர எல்லாத்துக்கும் கருத்து சொல்லும் முன்னாள் நிதியமைச்சர், மெத்த படித்த மேதை, பொருளாதார நிபுணர் ப.சிதம்பரம் இதுவரைக்கும் ஏதும் சொல்லாம கம்'ன்னு இருக்காரு என்றால் விவகாரம் மிக பெரிய அளவில் இருக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
சிதம்பரம் மட்டுமின்றி அவரோட மகன் நெட்பிலிக்ஸ் புகழ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூட இந்த விவாகரத்தில் இதுவரை வாயே திறக்காதது காங்கிரஸ் கட்சியினர் இடையே கூட பேசு பொருளாக மாறி இருக்கிறது.இருவரின் அமைதியின் பின்னணி என்ன என சில தகவல்கள் பரவி வருகிறது, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு சாரதா சிட் பண்ட் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது , இந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் சுமார் 30 ஆயிரம் கோடி அதிக வட்டி தருவதாக பணத்தை திரட்டியது.பின்பு இது மோசடி என தெரியவர, இந்த நிதி நிறுவனத்தின் 30 ஆயிரம் கோடி முறைகேட்டு வழக்கை சிபிஐ மட்டுமில்ல அமலாக்கத்துறை சேர்ந்து கையிலெடுத்து தனித்தனியாக பல கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மோசடி வழக்கில் சாரதா சிட் பண்ட் நிறுவனம் 42 கோடி ரூபாயை சேனல் துவங்க முறைகேடா கொடுத்த விவகாரத்தில் சட்ட உதவிகள் கொடுத்துருக்காங்கன்னு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தோட மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது, ஏற்கனவே நளினி சிதம்பரம் ஒரு மிகப்பெரிய லாயர் அப்படின்றதும், அவங்க சில மணி நேரம் ஒரு கேசுல ஆஜராக லட்சக்கணக்குல பணம் வாங்கும் நபர் என்பதும் முக்கியமான தகவல்.
நுங்கம்பாக்கத்துல நளினி சிதம்பரம் வச்சிருந்த அவங்க அலுவலக வாடகையே மாசத்துக்கு லட்ச கணக்குல இருக்கும் என்று கூறப்படுகிறது, இந்த சூழல்ல இந்த வழக்குல நளினி சிதம்பரத்துக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியா முடக்கி இருக்காங்க, நளினி சிதம்பரத்தோட சொத்து மட்டுமில்ல, சிபிஎம் முன்னால் எம்.எல்.ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ் மற்றும் அசாம் முன்னாள் முதல்வர் இறந்து போன அஞ்சனுக்கு சொந்தமான நிறுவனம் இப்படி மூன்று முக்கியமான நபர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை பண மோசடி வழக்குல முடக்கி உத்தரவு போட்டு இருக்கிறது.
நளினி சிதம்பரத்துக்கு சொந்தமான 3.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், 3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருக்கு. இவ்வளவு பெரிய விவகாரம் நடந்த பின்பும் ப.சிதம்பரம் இதுவரை வாய் திறக்கவில்லை.
இது அனைத்திற்கும் மேல் நேத்து மனைவியோட சொத்தை முடக்குறாங்க, முடக்கும்போது ப.சிதம்பரம் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் 'சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை கௌரவ சின்னம் போல் மத்திய அரசு வெளிப்படுத்துவது வெட்கக்கேடானது' அப்டின்னு சொல்லி இருக்காரு.மனைவி சொத்தை பண மோசடி வழக்குல அமலாக்கத்துறை முடக்குறாங்க இதை நினைச்சு வெட்கப்படாம மத்திய அரச வெட்கக்கேடான அரசு அப்டின்னு எப்படி பேசுகிறார் என விமர்சனம் எழுக்கின்றது.
இவருதான் இப்படின்னு பார்த்தா இவங்க மகன் அதாங்க சிவகங்கை தொகுதி எம்.பி, வழக்கம்போல நாட்ல ஏதாவது முக்கியமான விஷயம் நடக்கும்போது netfix ல ஏதாவது நல்ல படம் பார்த்தா சொல்லுங்கன்னு சொல்லிட்டு தான் ஒரு எம்.பி அப்டின்றத மறந்து ட்வீட் போட்டு ட்விட்டர்ல விளையாடும் அவரோட பையன் கார்த்தி சிதம்பரமும் இதுவரைக்கும் இத பத்தி வாயே திறக்கல!
இப்படி பண மோசடி வழக்குல முன்னாள் நிதி அமைச்சர் மனைவி சொத்தை முடங்கின விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், எதோ உத்தமர் மாதிரி சிலர் அமைதியா இருக்குறது இதை விட அதிக பரபரப்பு உள்ள விஷயமெல்லாம் பின்னாடி இருக்கு என்பது போல் உள்ளது.