24 special

திருமாவளவனின் முகமூடி கிழிந்தது... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Thirumavalavan
Thirumavalavan

பட்டியலின மக்களின் காவலர், தலித் சமுதாய மக்களின் ஆபத்பாந்தவன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எங்களை விட்டால் ஆள் கிடையாது என பட்டியலின மக்களை குறிவைத்து, உங்களுக்காக நான் ஏதாவது செய்வேன் என அரசியலில் கட்சி நடத்தி, அதன் மூலம் கூட்டணி அமைத்து, பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி எம்.பி, எம்.எல்.ஏ என தன் கட்சிக்கு பதவிகளை பெற்ற திருமாவளவன் வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு மாதம் கழித்து வேங்கைவயல் கிராமம் பக்கம் எட்டி பார்த்துள்ளார். 


புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதியில் ஒரே ஒரு குடிநீர் தொட்டி இருக்கிறது, இந்த குடிநீர் தொட்டியில் டிசம்பர் மாதம் சிலர் மனித மலத்தை கலந்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அங்குள்ள இரு வேறு பிரிவுகளில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த செயல் செய்ததாக கூறி செய்திகள் பரபரப்பாகியது. 

அந்த குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரத்தில் திமுக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இரண்டு மாதங்களாகியும் யார் இந்த கொடூர செயலை செய்தார்கள் என இன்று வரை விசாரணை மட்டுமே நடத்தி வருகிறதே தவிர அந்த சம்பவம் தொடர்பாக யாரும் குறிப்பிட்டு கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலின சமுதாய மக்கள் ஆனால் பட்டியல் இனத்தின் பாதுகாவலர் என கூறிக்கொண்டு அரசியல் செய்யும் திருமாவளவன் அப்பொழுது திமுகவின் பேச்சை கேட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி பிஸியாக இருந்தார். 

ஆனால் அவ்வபோது மட்டும் வேங்கைவயல் குறித்த அறிக்கை வெளியிட மட்டும் மறக்கவே இல்லை, வேங்கைவயல் பிரச்சினையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை, வேங்கை வேயில் பிரச்சினையில் அதிமுக இதுவரை கருத்து கூறவில்லை, வேங்கைவயல் பிரச்சனையில் சீமான் கருத்து கூறவில்லை என மற்ற கட்சிகளை கூறி வருவாரே தவிர இவர் வேங்கைவயல் பிரச்சினைக்கு என்ன செய்தார் கடைசி வரை கூறாமல் இருந்த நிலையில் தற்போது வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் திருமாவளவன் இரண்டு மாதம் கழித்து வேங்கைவயல்  கிராமத்திற்கு சென்று எட்டி பார்த்துள்ளார். 

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வேங்கை வேல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது, அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது ஒரு சிறு நாட்களில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை மட்டும் நடத்திவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடவடிக்கை எடுக்க மனுவை கொடுத்துவிட்டு அமைதியாக திமுகவின் பேச்சை கேட்டு ஆளுநரை எதிர்த்து குரல் கொடுத்து வந்த திருமாவளவன் தற்பொழுது வேங்கைவயல் பக்கம் எட்டிப் பார்த்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

வேங்கை வயலில் மருத்துவ முகாம் நடத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறும் பொழுது 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளோம் என கூச்சமே இல்லாமல் பெருமையாக வேறு கூறிக்கொண்டார். பெருமையாக கூறிக் கொண்டது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விசிக சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு மருத்துவ முகாமை நடத்தி உள்ளோம். மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது' எனவும் கூறினார்.சம்பவம் நடந்து மக்கள் பாதித்து 40 நாட்கள் கழித்து மாத்திரை கொடுத்த ஒரே அரசியல் தலைவர் திருமவளவனாகத்தான் இருக்கும்.

மேலும் பேசிய அவர், 'அடுத்த கட்ட நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது என வேங்கைவயல் பற்றி சம்பிரதாயமாக பேசிவிட்டு மீண்டும் பாஜக பக்கம் தாவினார். தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் சாதி மதம் உள்ளிட்ட பிரச்சனைகளை கூர்மைப்படுத்த தலையிட்டு வருகின்றனர், இந்த பிரச்சினை வட இந்திய மாநிலங்களின் குறிப்பாக சங் பரிவார்களால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இருக்கிறது என வேங்கையவையில் பிரச்சனைக்கும் சங்பரிவார் அமைப்பிற்கும் முடிச்சு போட்டு பேசினார். மேலும் சக்திகள் பற்றி எங்கும் பேசி பழக்கப்பட்ட திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத சனாதன சக்திகளுக்கும் முடிச்சுப்போட்டு பேசினார். 

தூக்கத்தில் கூட சனாதனம். சங்பரிவார் அமைப்புகள் என புலம்பி தவிக்கும் திருமாவளவன் வேங்கைவயல் கிராமத்தின் கொடூரத்திற்கும் சனாதனம். சங்பரிவார் அம்மைப்புகள் காரணம் என பேசியதுதான் ஹைலைட்! சம்பவம் நடந்த 40 நாட்கள் கழித்து அங்கு போய் நின்றதையோ, தமிழகத்தை ஆள்வது திமுக என்பதையோ பற்றி திருமாவளவன் பேசவே இல்லை! தலித் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.