நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டி ஆர் பாலு மற்றும் பிற தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டில்தான் வரும் என்பதில்லை மாறாக 2023 டிசம்பர் மாதம் அல்லது 2024 ஜனவரி மாதத்தில் முன்கூட்டியே வரலாம் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை தி.மு.கவிற்கு சாதகமாக இல்லை, காரணம் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அமலாக்க துறை வசம் சிக்கியுள்ளனர். இது மட்டுமா! அடுத்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இவர்களும் அமலாக்கத் துறை வசம் சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை திமுகவிற்கு சாதகமாக இல்லை என்பதாலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவாக இல்லை என்பதாலும் பாஜகவிற்கு வரும் தேர்தலில் இது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்நிலையில் எதிர் கட்சிகள் வரும் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறுவது கஷ்டம் எனவும் உணர்ந்துவிட்டதாக தெரிகிறது.
இதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் பேசியபோது ” ஒழுங்காக இருங்கள் இல்லை என்றால் துறையை மாற்றி விடுவேன் “ என அமைச்சர்களை மு க ஸ்டாலின் எச்சரித்ததாக தெரிவித்தார், இதன் பின்னணியில் கூட வரும் தேர்தலை மனதில் வைத்து சொன்னதாகத்தான் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில் திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக நிறைவேறியது ஆனால் அரசியல் எதிரிகள் தேர்தல் களத்தில் நெருக்கடியை உருவாக்க திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக அதற்கான பணிகளில் இறங்க வேண்டும் என எச்சரித்தார்.
மேலும் ஜூலை 26 ஆம் தேதி திருச்சியில் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் புதிய வாக்காளர்களை தேர்தலில் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் இறந்துவிட்ட வாக்காளர்களை தேர்தல் பட்டியலில் இருந்து நீக்குவதும் அவசியமானது என்றும் வாக்கு சாவடியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் நாள் அன்று பணியாற்ற வேண்டிய கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கடிதத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்று தொடங்கிய முதல்வர் மு க ஸ்டாலின் 2024 “நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியும் வரலாம் அல்லது உரிய நேரத்தில் வரலாம் ! என்றும் நாடாளுமன்ற தேர்தல் களம் அழைக்கிறது . வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர்! தேர்தல் எப்போது வந்தாலும் வலிமையுடன் பணிகளை மேற்கொள்ளுங்கள்! என்று தனது தொண்டர்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டார்.
மேலும் திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் அதற்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுரையும் வழங்கியுளளார். பாஜகவின் தேர்தல் திட்டம் வலுவாக இருப்பதாலும், பாஜக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாலும் அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் தேர்தல் பயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.