Tamilnadu

ஐயப்ப பக்தர்கள் சாபம் தொடரும் சோகம் வெளுத்து பிந்துவை எடுத்த இளைஞர்!

Bindhu ammini
Bindhu ammini

கேரள மாநிலம் சபரிமலை சந்நிதானத்திற்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் காவல்துறை உதவியுடன் ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்களில் ஒருவர் பிந்து என்ற பிந்து அம்மிணி, இவர் தற்போது தொடர் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார் எந்த பக்கம் சென்றாலும் யாராவது ஒருவர் பிந்து அம்மிணியை வெளுத்து அனுப்புகின்றனர். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் பிந்துவை வெளு வெளுவென ரோட்டில் வைத்து அடித்துள்ளார், சபரிமலை விஜயம்... தொடரும் சம்பவங்கள்!


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென பிந்து அம்மினி மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதனால் காயம் அடைந்த பிந்து அம்மினி சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் கோழிக்கோடு கடற்கரையில் வைத்து இளைஞர் ஒருவர் வெளுத்து எடுத்துள்ளார். சபரிமலை சென்று வந்த பிறகு வழக்கறிஞரான பிந்து அம்மினி மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன மாதத்தில் ஒருவரிடம் அடி வாங்குவதே பிந்து அம்மிணிக்கு வேலையாக உள்ளது, இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் பிந்து அம்மினி. அதில் வெள்ளை வேட்டியும், கறுப்பு சட்டையும் அணிந்த ஒருவர் பிந்து அம்மினியை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஒரு வழக்கு சம்பந்தமாக தனது கட்சிக்காரருடன் சென்ற சமயத்தில் கோழிக்கோடு வடக்கு கடற்கரை பகுதியில், மதுபோதையில் வந்த ஒருவர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக பிந்து அம்மினி தெரிவித்துள்ளார். இதுபற்றி பிந்து கொடுத்த புகாரின் அடிப்படையில், வெள்ளயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணியத்தை அவமானப்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாவம் முன்பெல்லாம் பெண்ணியம் பேசிய பிந்து இப்போது வெளியில் செல்லும் போதே முகத்தை மூடி கொண்டுதான் செல்கிறாராம் அதுவும் மார்கழி மாதம் ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் வெளியில் வராமலே பதுங்கி இருக்கிறாராம் பிந்து, விளம்பரத்திற்கு கோவிலுக்குள் சென்று இப்போது அடிக்கடி அடிவாங்கி செய்திகளில் வரும் நிலைமை பிந்துவிற்கு உண்டாகி இருக்கிறது.