24 special

பிரதமர் பற்றி அப்படி ஒரு செய்தி வெளியிட காரணம் இதுதானா? இப்ப புரியுது!

Modi
Modi

தமிழகத்தின் கலாச்சார நகரங்களில் முக்கியத்துவம் பெற்ற இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுக்கிறார் என்று தமிழகத்தை சேர்ந்த சாட்டிலைட் ஊடகமான புதிய தலைமுறை செய்தி வெளியிட அது தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


இராமரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வாரணசியிலும், இராமநாதபுரத்திலும் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என அதில் குறிப்பிட பட்டுள்ளது, மேலோட்டமாக பார்த்தால், இந்த செய்தி உண்மையாக இருக்கும் என்றே பலரும் நினைக்க தோன்றுகிறது.

காரணம் இராமநாதபுரம் அரசியல் களம் படு சூடாக இருக்க கூடிய ஒன்று இராமநாதபுரத்தில் சாதி அரசியலை கடந்து மத அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது, மேலும் பாஜகவிற்கு அடிப்படை வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் ஒன்று இராமநாதபுரம் இவை அனைத்தும் பிரதமர் இராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை நம்பும் படி செய்தாலும் உண்மை நிலவரம் அது இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு அவர் தன் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் உத்திர பிரதேசம் வாரணசியில் மட்டுமே போட்டியிடுவார், மோடி தமிழகத்தில் போட்டியிடுவார் என்ற செய்தி எதிர் மறையான தாக்கத்தை மட்டுமே களத்தில் உண்டாக்கும், நாளை தமிழகத்தில் மோடி போட்டியிடவில்லை என்றால் மோடி தமிழகத்தை பார்த்து பயந்துவிட்டார் என்ற கருத்தை உருவாக்க இது போன்ற செய்திகள் பயன்படுமே தவிர பாஜகவிற்கு பலத்தை கொடுக்காது என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது ஒருபுறம் இருக்க பிரதமர் மட்டுமல்ல எந்த கட்சியின் தேசிய தலைவர்களும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள அதிக தொகுதிகளை தேர்வு செய்தே களத்தில் நிற்பார்கள், நாடு முழுவதும் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அதிக நேரம் மோடி போன்றவர்களுக்கு தேவை அதை விடுத்து ஒரே தொகுதிக்குள் கட்சியை முடக்க மோடி விரும்ப மாட்டார்.

மோடி தமிழகத்தில் மட்டுமல்ல எங்கு நின்றாலும் வெற்றி பெருவார் அது பிரச்சனையல்ல அவர் தனது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற அதிக இடங்களில் பிரச்சாரம் செய்ய அவருக்கு நேரம் தேவை எனவே மோடி நிச்சயம் தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பே இல்லை, எதிக்கட்சிகள் வேண்டும் என்றே கிளப்பி இருக்கும் தேர்தல் கிசு கிசுகளில் இதுவும் ஒன்று என்கிறார் மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர் நடராஜ்.

இராமநாதபுரத்தில் ஒரு வேலை பிரதமர் மோடி போட்டியிட்டால் தமிழகத்தில் நிச்சயம் கள நிலவரங்களை மாற்றும் அதில் மாற்று கருத்து இல்லை, பரீட்சியம் இல்லாத தொகுதியில் பிரதமர் மோடி களம் இறங்கினால், பாஜகவின் பலம் பிரதமர் மோடியை எப்படியாவது இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற செய்யவேண்டும் என களம் இறங்குவார்கள் அதில் அவர்கள் வெற்றியும் பெருவார்கள் ஆனால் வட மாநிலங்களில் கவனம் செலுத்துவது குறையும் இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 20 தொகுதிகள் வரை பாஜக இழக்க நேரிடும் ஆகவே மோடி அதனை விரும்ப மாட்டார்.

ஒரு வேலை பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்றால் சமீபத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து நட்டா தனது நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்க மாட்டார், முதல் கூட்டம் இராமநாபுரத்தில் நடந்து இருக்கும், மோடி தமிழகத்தில் போட்யிட இருப்பதாக சொல்லப்படும் தகவல் பரபரபிற்காக சொல்லப்படும் தகவலே தவிர வேறு ஒன்றும் இல்லை என முற்று புள்ளி வைக்கிறார்கள் நமது டெல்லி வட்டாரங்கள் எனவே பிரதமர் மோடி இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் என்ற செய்தி எதிர்க்கட்சிகள் கொளுத்தி போட்ட செய்தியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறியமுடிகிறது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் திமுக மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுமா? அதிமுக செல்வாக்கை இழந்து இருக்கிறதா? பாஜக வளர்ந்து இருக்கிறதா? தொகுதி வாரியாக களம் இறங்குகிறது TNNEWS24 குழு விரைவில் மக்கள் பார்வைக்கு தேர்தல் சர்வே முடிவுகள் பிரமாண்டாமாக வெளியாக இருக்கிறது மறக்காமல் உங்கள் TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.