நடிகர் கமல்ஹாசன் என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது திரை உலகம் அறிந்த ரகசியம் அவரது திரைப்படம் தொடங்கி அரசியல் தேர்வு வரை அனைத்தும் சர்ச்சை ஆனது ஒரு புறம் என்றால் தற்போது கமல் ராகுல் காந்தியை பேட்டி எடுத்து இருக்கும் சம்பவம் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.
கமல் ராகுல் காந்தியை பேட்டி எடுத்ததற்கு பலனாக காங்கிரஸ் கமலுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இருப்பதாக வரும் தகவலை அடுத்து கடும் விமர்சனத்தை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது நடைபயணத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நடிகைகள் ரியா சென், ஸ்வரா பாஸ்கர், விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் கடந்தஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி டெல்லியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “ராகுல் என்னுடைய சகோதரர். தேசத்தின் ஒற்றுமைக்காக நான் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்தியாவை மீட்டெடுப்போம்.” என்று உணர்ச்சி தழும்ப பேசினார் கமல்.
இந்தநிலையில் கமல்ஹாசனுடன் ராகுல் காந்தி உரையாடிய வீடியோ தமிழ் சப் டைட்டில் உடன் ராகுலின் யூடுப் சேனலில் வெளியாகி இருக்கிறது
அந்த வீடியோவில் ராகுல் காந்தி, “வணக்கம் கமல், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வெறுப்பு என்பது கண்மூடித்தனமான ஒரு தவறான புரிதல். சீனர்களை எதிர்கொள்ள இந்தியாவால் மட்டும் தான் முடியும். மேற்கத்திய நாடுகளால் கூட முடியாது. தமிழர்கள் அன்பு செலுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.
அவருக்கு பதிலளித்த கமல்ஹாசன், “விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிப்பது தமிழர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அவர்கள் டெல்லிக்கு வந்து குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.” என்று பேசியிருந்தார்.
இதனை தற்போது பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் குறிப்பாக கமல் அரசியல்வாதியாக நேரடியாக குற்றசாட்டை வைக்க வேண்டும் ராகுலின் முதுகிற்கு பின்னால் நின்று வைக்க கூடாது என விமர்சனம் எழுந்து இருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் என்றால் கமல் ஹாசன் பிக் பாஸ் சூட்டிங் பணம் வாங்கி கொண்டு நடித்து கொடுத்தது போன்று ஜோதிமணி ஏற்பாட்டின் பேரில் பேட்டி எடுப்பது போன்று அருமையாக நடித்து இருக்கிறார், கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக கமல் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து தெளிவாக பெண் பத்திரிகையாளர் சந்தியா போட்டு உடைத்தார்.
அதே போன்று ராகுல் காந்தியுடன் கமல் கூட்டணி சேர்ந்து இருக்கும் தென் சென்னை ரகசியம் நன்றாக தெரியும் பணம் கொடுத்தால் என்ன வேணும் என்றாலும் பேசலாமா இதெல்லாம் ஒரு பிழைப்பா? என கமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் பாஜகவினர்.