தமிழகத்தில் பாஜக சமூக ஊடகங்களில் மட்டுமே தங்கள் பலத்தை நிரூபிக்க முடியும், களத்தில் குறிப்பாக கிராமங்களில் பாஜக தங்கள் பலத்தை என்ன என சோதனை செய்து பார்க்க வேண்டும் என பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகள் பேசுவது வழக்கம்.
ஆனால் அவர்கள் பேச்சை தலைகீழாக மாற்றுவது போன்று அரங்கேரி இருக்கிறது பாஜகவின் அதிரடி செயல்பாடு, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பன்னீர் குண்டு கிராமமே பெறுவாரியாக பாஜகவில் இணைந்து இருக்கின்றனர், பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு உண்மையில் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நகரங்களில் மட்டுமே பாஜகவின் வளர்ச்சி இருக்கிறது என குறிப்பிட்டவர்களுக்கு தென் மாவட்டத்தில் குறிப்பாக மதுரை பன்னீர் குண்டு கிராம மக்கள் பாஜகவில் இணைந்து இருப்பது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் மட்டுமல்ல களத்திலும் பணியாற்றுவோம் என திராவிட கட்சிகளுக்கு தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்து இருக்கிறார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.
கடமைக்கு கிராமத்திற்கு சென்றோம் மக்களை சந்தித்தோம் என்று இல்லாமல், அங்கு கூடி இருந்த மக்களிடம் பாஜகவின் தலைவர் யார் என கேட்க கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் மோடி என குறிப்பிட அவரை அழைத்து சால்வை அணிவித்தார், மேலும் கட்சி சின்னம் என்ன என கேட்க அனைவரையும் முந்தி கொண்டு சிறுமி ஒருவர் தாமரை என சொல்ல கைத்தட்டல் அதிர்ந்தது.இதன் மூலம் பிரதமர் மோடி மற்றும் தாமரை சின்னத்தையும் பாஜகவில் இணைத்தவர்களுக்கு தனக்கு உரிய பாணியில் கொண்டு போய் சேர்த்துள்ளார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்பு எல்லாம் தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுமா என கேள்வி எழுப்பினார்கள், ஆனால் இப்போது பாஜக கிராமத்தில் பெரியவர்கள் முதல் வரும் காலத்தில் வாக்கு அளிக்க காத்து இருக்கும் சிறுவர்கள் வரை கிராமங்களில் தங்கள் காலடி தடத்தை வலுவாக பதித்து இருப்பது பன்னீர் குண்டு என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் ஆட்கள் சேர்ப்பு பணி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தற்போது தொடங்கி இருப்பது பாஜக தொண்டர்களையும் உற்சாகம் அடைய செய்துள்ளது.
இது போன்று மதுரை மற்றும் விருதுநகர் முழுவதும் தங்கள் செயல்பாடு மிகவும் தீவிரமாக இருக்கும் என கூறுகின்றனர் மதுரை மாவட்ட பாஜகவினர். மதுரையில் நிகழ்ந்த சம்பவம் போன்று தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் தோறும் அரங்கேரும் என அடித்து கூறுகின்றனர் பாஜகவினர்.