Tamilnadu

வாங்கி கட்டிய மம்தா இதுதான் "தன் வினை தன்னை" சுடும் என்பதா?

Mamta
Mamta

மேற்குவங்கத்திற்கு வந்த பாஜக தலைவர்கள் பலர் மீது மம்தா கட்சியினர் தாக்குதல் நடத்தினர், பிரச்சாரத்திற்கு சென்ற யோகி ஆதித்யநாத்திற்கு அனுமதி கொடுக்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார் மம்தா, அன்று அவர் என்ன செய்தாரோ இன்று அதுவே அவருக்கு கிடைத்துள்ளது.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார் அப்போது இந்து யுவ வாஹினியின் எதிர்ப்பை எதிர்கொண்டார், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை காட்டி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதற்காக நேற்று மாலை  வாரணசியை அடைந்த பானர்ஜி, 'கங்கா ஆரத்தி'யில் கலந்துகொள்வதற்காக தஷாஷ்வமேத் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ​​வாஹினியின் ஆர்வலர்கள் சேட்கஞ்ச் கிராசிங்கில் மம்தா கான்வாய் முன் கூடினர்.

போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் மற்றும் கறுப்புக் கொடிகளை அசைத்து, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.  மம்தா பானர்ஜி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.

கான்வாய் நகர்ந்தபோது, ​​கடாலியா பகுதியில் பாஜக ஆதரவாளர்கள் அவரது கருப்புக் கொடிகளைக் காட்டி, "மம்தா பானர்ஜி வாபஸ் ஜாவோ (திரும்பிப் போ)" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷங்களை எழுப்பினர்.அப்போது, ​​அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்,கோஷம் எழுப்பியவர்களை அகற்ற முயன்றனர்.

இந்து யுவ வாஹினியை பாஜக தலைவரும் உ.பி முதல்வருமான யோகி ஆதித்யநாத் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவினார். மோடியை கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா அகிலேசின் சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரச்சாரம் செய்து வருகிறார் -

வம்படியாக யோகி ஆட்சியை அகற்றியே தீருவேன் என உபி சென்ற மம்தாவை சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடும் அளவிற்கு கொடுத்த பதிலடியால் தற்போது வாயை மூடி அமைதியாக உபியில் இருக்கிறாராம் மம்தா. இது தான் தன் வினை தன்னை சுடும் என்பதா?