அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருப்பதாகவும் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜக கொடுத்த ஆலோசனையை எடப்பாடி நிரகாரித்ததே இதற்கு காரணம் என நகராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்து கொண்டுள்ளது டெல்லி தலைமை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டதுதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் சில பெருந்தலைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
'சரி... நீங்கள் சொன்னதுபோலவே எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜகவை வைத்து கொண்டதுதான் காரணம் என்று வைத்து கொள்வோம். ஆனால் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துதானே நின்றது...
அப்படியிருந்தும் அத்தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிமுகவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை' என்று அதிமுகவின் தீவிர அபிமானிகள் கேட்கும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டன.விளைவு... கட்சி அதிமுக, அமமுக என்று இரண்டாக பிரிந்திருப்பதே தேர்தல் தோல்விக்கு காரணம் எனவும், இப்படியே பிரிந்திருந்தால் எதிர்காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எனவே கட்சியை உடனே ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் ஒருசாரார் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.அவர்கள் இத்துடன் மட்டும் நின்றால் பரவாயில்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டு்ம் என்பதும் அவர்களின்பிரதான விருப்பமாக உள்ளதாம். தேனியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், தேனி மாவட்ட அதிமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் இது பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறலாம் என கூறப்படுகிறது இந்த சூழலில் தற்போது அண்ணாமலைக்கு கொங்கு பகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது மேலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலை தலைமையில் அணி திரள தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலம் இப்படி என்றால் ஓபிஎஸ் சசிகலா இருவரும் இணைந்தால் தென் மாவட்டத்தில் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் அதே நேரத்தில் பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் பாஜக கணக்கிட்டுள்ளது இந்த சூழலில்தான் எடப்பாடி இதற்கு குறுக்கே இருப்பதால் அவருக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார் என்றும் இனி தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என்று கூறப்படுகிறது.
More watch videos