சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியல் களம் எப்படி இருந்ததோ அதே போன்று தற்போது அரசியல் களம் படு சூடாக அரங்கேறி வருகிறது, நாளுக்கு நாள் திமுக பாஜக இடையே நடைபெறும் கருத்து வேறுபாடு காரணமாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக திமுக இடையே நடைபெற்ற அரசியல் மோதல்.. நேரடி கருத்து யுத்தமாக மாறியது.. மாரிதாஸை குண்டர் சட்டத்தில் அடைத்தே தீரவேண்டும் என ஆளும் திமுக அரசும்.. குண்டர் சட்டத்தில் கைது செய்ய விடாமல் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என நிரூபித்து சட்ட ரீதியாக மாரிதாஸை வெளியில் கொண்டுவர பாஜகவும் களத்தில் இறங்கி வேலை செய்தனர்.
இந்த சூழலில் அண்ணாமலை ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றும் நாங்கள் மத்தியிலும் 17 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை ஆளும் அரசு உணர்ந்து கொள்ளவேண்டும் என எச்சரிக்கை விடுத்தார், இந்த சூழலில் அண்ணாமலை ஏன் இவ்வாறு எச்சரிக்கை விடுகிறார் என்ற கேள்வி எழுந்தது.ஒருபக்கம் அதிகார மிரட்டல் என கூறப்பட்டாலும் தற்போது ஒரு செய்தி படு வைரலாக பரவி வருகிறது பரவும் வீடியோவில் பேசும் பத்திரிகையாளர் உதயகுமார், அண்ணாமலை 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் என எச்சரிக்கை விடுத்தது மற்ற மாநில போலீசார் உள்ளே வந்து கைது செய்யப்படுவார்கள் என்ற நினைப்பில் இல்லை உண்மையில் விஷயமே வேறு?
அனைத்து மொழியிலும் தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சி தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்குகிறது மேலும் பல்வேறு கார்ப்பரேட் தொழில்களையும் செய்ய திட்டமிட்டு வேலையை தொடங்கியுள்ளது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அண்ணாமலை அவ்வாறு தெரிவிக்கிறார் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளும் திமுக அதிகாரத்தை காட்டினால்.,
17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எங்களால் எத்தனை அழுத்தங்களை கொடுக்க முடியும் என சூசகமாக அண்ணாமலை தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும் வகையில் சொல்லியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் அந்த பத்திரிகையாளர் உதயகுமார்.ஓ இதுதான் அண்ணாமலை அடிக்கடி ஆளும் திமுக அரசை நோக்கி மிரட்டல் விடுக்க காரணமா? இது தவிர்த்து மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார் அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.