திருமாவளவன் திருமண விழா ஒன்றில் திமுகவினரால் மீண்டும் அவமதிக்கப்பட்ட சம்பவம் விடுதலை சிறுத்தைகளை கொதிப்படைய வைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அடிக்கடி திமுகவினரால் பொதுவெளியில் எதாவது அவமதிக்கும்படி நடப்பதும் பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சித்தும் பின்னர் அதற்க்கு விளக்கம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி'யுமான திருமாவளவன் கடந்த வருடம் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்தார், அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அவரின் இந்த சந்திப்பின்போது ராஜகண்ணப்பன் திருமாவை பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது எப்படி பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், இதுதான் உங்கள் சமுக நீதியா என திமுகவை பார்த்து அனைவரும் கேள்வி எழுப்ப துவங்கியது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டணிக் கட்சி தலைவருக்கு அதுவும் ஒரு எம்.பி'க்கு ஒரு சோபா கூட கொடுக்க முடியவில்லையா என தி.மு.க மீதும், வெளியில்தான் 'திமிறி எழு, திருப்பி அடி' என்பது போன்ற வீர வசனங்கள் எல்லாம் தி.மு.க'விடம் கிடையாதா என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பி அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த விவகாரத்தின் சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் அது போல ஒரு சர்ச்சை தோன்றியது. எம்.பி திருமாவளவன் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனை இந்த சம்பவம் நடந்து மாதங்களில் கும்பகோணத்தில் நிகழ்ச்சிகளுக்காக கலந்துகொள்ள செல்லும் பொது நேரில் பார்க்க சென்றார்.
அப்பொழுது எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை திருமாவளவன் நேரில் சந்தித்த பொழுது சாக்கோட்டை அன்பழகன் குஷன் சேரில் அமர்ந்திருக்க திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி என்னதான் கூட்டணியில் இருந்தாலும் கட்சியினரை கொடியேற்றாமல் விடுவது, திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுப்பது, திருமாவளவனை முக்கிய விழாக்களில் அழைக்காமல் விடுவது அப்படியே அணைத்தாலும் மேடை ஏற்றாமல் இருப்பது, அப்படியே மேடை ஏற்றினாலும் பிரதானமாக கௌரவிக்காதது என ஒரு திமுக கூட்டணியில் திருமாவளவனை அவமதிக்கும் செயல்கள் தொடரும் நிலையில் தற்பொழுது திருமண விழா ஒன்று திமுக வரும்பொழுது திருமாவளவன் பொக்கே நீட்ட அந்த பொக்கேவை மாப்பிள்ளையிடம் இருந்து பிடுங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திருமாவளவன் மாப்பிள்ளை மற்றும் பெண்ணிற்கு பொக்கே கொடுக்கும் பொழுது அருகில் நின்று ஆ ராசா சிரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென உதயநிதி மேடைக்கு வர 'இது கிடக்குது' என்பது போல திருமாவளவன் கொடுத்த அந்த பொக்கேவை பிடுங்கினார் திமுக எம்.பி ஆ.ராசா. உதயநிதி வந்து பொக்கே கொடுக்க திருமாவளவன் செய்வதறியாது திகைத்தார்.
என்னடா இது வயதில் கூட நான் உதயநிதிக்கு பெரியவர் தான்! அரசியலில் அனுபவத்தில் கூட உதயநிதியை விட நமக்கு அதிக அனுபவம் உண்டு! ஆனாலும் இப்படி பொதுவெளியில் மேடை என்று கூட பார்க்காமல் நம்மளை இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள் என திருமாவளவன் புலம்பி வந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. என்னதான் கூட்டணி கட்சியில் இருந்தாலும் நம்மை இவர்கள் கொடியேற்ற விட மாட்டார்கள் என திருவாரூரில் திருமாவளவன் பேசியதுதான் ஞாபகம் வருது என அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். திருமாவளவனின் கூட்டணியை விட்டு மாறிவிட வேண்டும் என சிலர். பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.