24 special

அடுத்ததாக அமலாக்க துறையிடம் சிக்க போகும் உதயநிதி...!

Annamalai, udhayanidhi stalin
Annamalai, udhayanidhi stalin

நோபல் பிரிக்ஸ் உதயநிதி அறக்கட்டளை தொடர்பு தற்பொழுது அம்பலமாகியுள்ளதால் உதயநிதி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. டிஎம்கே பைல்ஸ் பார்ட் 1 வெளியிட்டதை தொடர்ந்து டிஎம்கே பைல்ஸ் பார்ட் 2 வெளியிட இருப்பதாகவும் அந்த டிஎம்கே பைல்ஸ் பார்ட் டூவில் திமுகவில் இருக்கும் தலைவர்கள் மட்டுமல்ல வெளிக்கட்சியில் இருந்து திமுகவில் வந்து சேர்ந்தவர்களின் பெயர் மற்றும் சொத்து விவரங்களும் குறிப்பிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவ்வப்போது முதல்வர் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய முக்கிய விஷயங்களை வெளியிட்டு வருகிறார் அண்ணாமலை. 


உதயநிதி ஸ்டாலினை ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி அண்ணாமலை கூறுவது தகவல்கள் அவ்வப்போது அமலாக்கத்துறை கவனித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கடந்த வாரங்கள் உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கியது மட்டும் அல்லாமல் அமலாக்கத்துறை உதயநிதி அறக்கட்டளையின் மீது நடவடிக்கையும் எடுத்தது. ஆனால் உதயநிதி தரப்பில் இருந்து அந்த அறக்கட்டளைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போன்ற விளக்கம் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நோபல் பவுண்டேஷன் மற்றும் உதயநிதி அறக்கட்டளைக்கு சம்பந்தம் இருப்பதாக அண்ணாமலை திடுக்கிடும் ஆதாரம் ஒன்று வெளியிட்டுள்ளார் அதை ஆதாரமாக கூறாமல் தற்போது தகவலாக வெளியிட்டுள்ளார் மேலும் அமலாக்கத்துறை கேட்கும் பட்சத்தில் அதனை ஆதாரமாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'அமைச்சர் அன்பில் மகேஸ் உதயநிதி ஃபவுண்டேசனை நடத்துகிறார். கடந்த வருடம் நம் முதலமைச்சர் துபாய்க்கு சென்றபோது, நோபல் நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு வந்தார். இன்று உதயநிதி ஃபவுண்டேசனை அமலாக்கத்துறை ரெய்டு பண்ணி, அக்கவுண்டை சீல் பண்ணி சட்டத்துக்கு புறம்பாக நிதியை பெற்றுள்ளார்கள் என்று அந்த ஃபவுண்டேசனை நிறுத்தி வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், துபாயில் நோபல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது அவங்க பணத்தை கொண்டு போய் திரும்ப கொண்டுவரத்தான் என்று ஏற்கனவே சொன்னோம். அதற்கு ஆதாரம் கேட்டார்கள். இப்போது சொல்கிறேன்.

நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரி, 53/22 கே.ஜி. நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி.நகர், சென்னை. உதயநிதி ஃபவுண்டேஷன் முகவரியும் அதேதான். எவ்வளவு ஆச்சரியம் பாருங்க. இது போதாதா ஆதாரம்? இதே ஃபவுண்டேசன்ல 2009-ல் உதயநிதி டைரக்டர். அதே முகவரியில் இயங்கக்கூடிய நிறுவனத்தில் கடந்த வருடம் முதலமைச்சர் 1000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இதைவிட வெட்கக்கேடான செயல் ஏதுமில்லை. இதுபோல அடுக்கணக்கான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்' என கூறினார்.

இப்படி அண்ணாமலை முகவரியுடன் உதயநிதி அறக்கட்டளை மற்றும் நோபல் பவுண்டேஷன் ஆகிய இரு தொடர்பு பற்றி பொதுவெளியில் மேடையில் அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை கேட்டால் தகவல் கொடுப்ப தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது உதயநிதி தரப்பை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தற்பொழுது தொடர்ந்து ஏழாவது நாளாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கியவர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை நடைபெற்று வரும் இடையில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை உதயநிதியை நெருங்கலாம் எனும் அளவில் அமலாக்க துறையின் வட்டத்திற்குள்ளும், கண்கணிப்புக்குள்ளும் உதயநிதி தொடர்ந்து இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு சிக்கல்கள் தொடர்ந்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.