நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் twitter கணக்கு முடக்கப்பட்டிருப்பது நீயா நானா என்ற பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி சமூக வலைதளத்தில் பரபரப்பாக இயங்கி வரும் ஒரு இயக்கமாகும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சமூக வலைதளங்களான யூடூப், பேஸ்புக் மேலும் மொபைல் செயலியான வாட்ஸ் அப்பில் மிகவும் தீவிரமாக இயங்கி வருவார்கள்.
இது மட்டுமல்லாமல் சீமானின் கருத்துக்கள் அதிகம் பொதுவெளியில் பேசப்படுவதை விட சமூக வலைதளங்களில் அதிக பேசப்படுவதும், அவரின் ஆதரவாளர்களால் பரப்பப்படுவதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இதனை தொடர்ந்து சீமானின் ட்விட்டர் கணக்கு நேற்று மாலை திடீரென முடக்கப்பட்டது, நேற்று மாலை வரை சரியாக இயங்கி வந்த ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டிருப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள், ஆதரவாளர்கள் அதிர்ந்தனர்.
ஏன் அண்ணன் சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது? என்ன ஆயிற்று என பாஸ்வேர்ட் ஏதும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்றெல்லாம் தவித்து வந்தனர். இந்த நிலையில் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பல்வேறு வகையான கருத்துக்கள் உலாவி வருகின்றன. ஒன்று சீமான் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் கொடி மற்றும் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை தனது twitter கணக்குகளின் மூலம் பரப்புரை செய்து வந்ததாகவும் அதாவது ஈழத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பெயர், கொடி அவர்களின் வீடியோவை பதிவிட்டு வந்ததாகவும் அதன் காரணமாக தேசிய பாதுகாப்பு கருதி சமூக வலைதளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது போதாது என்று இன்னொரு வகையான தகவல்களும் உலா வருகின்றன அதாவது தொடர்ந்து சீமான் தமிழக அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகிறார், கருத்துக்களை பரப்பி வருகிறார் இதன் காரணமாக சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் தமிழக அரசு தனது சைபர் செல் மூலம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் twitter நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீமான் கணக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர் நீங்களே உங்கள் காவல்துறையை வைத்து ட்விட்டர் கணக்கு முடக்கி விட்டு தற்பொழுது இல்லை என்கிறீர்களா? சீமானுடைய கணக்குகள் தமிழில் தான் அதிகம் பதிவிடப்படும் ஆனால் அகில இந்திய அளவில் சீமானின் கணக்கை முடக்குவதற்கு இங்கிருந்து யாரேனும் நடவடிக்கை எடுக்காமல் தானாக முடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை இப்படி நீங்களே முடக்கி விட்டு இல்லை என்கிறீர்களா என்பது போன்று தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
ஆனால் நாம் தமிழர் கட்சி இன்றோ எங்கள் கணக்கை முடக்கியது எங்களுக்கு கிடைத்த வெற்றி நாங்கள் தொடர்ந்து பேசுவது உங்களுக்கு உறுத்துது அதனால் எங்கள் கணக்கை முடக்கி விட்டீர்கள் என பொதுவாக கூறி வருகிறார்கள். ஆனால் சீமானின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில்தான் முடக்கப்பட்டுள்ளது அயல்நாடுகளில் சீமானின் ட்விட்டர் கணக்கை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்றுதான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திமுக அரசை விமர்சித்தார் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.