தமிழகத்தில் அரசியலை சுருங்க சொல்வது கார்ட்டூன்கள்தான், நீளமாக எழுதி மக்களுக்கு விளக்க வேண்டிய விஷயத்தை பார்வையில் பட்டதும் புரிந்து கொள்ள வைப்பதே கார்ட்டூன்கள் அந்த வகையில் பிரபல தனியார் பத்திரிகை விகடன் வெளியிட்ட கார்ட்டூன் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் இடையே நடப்பது என்ன என தெளிவாக சொல்லிவிட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் ஸ்டாலின் விழுங்க நினைப்பது போலவும், முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி உருவம் கொண்ட மீன் முகம் விழுங்க நினைப்பது போலவும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முக பிம்பத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடித்து இருப்பது போன்ற கார்ட்டூனை வெளியிட்டது பிரபல பத்திரிகை விகடன்.
அதே நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த ஊழல் புகார்கள், குறிப்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடநலதுறை அமைச்சர் மீது கூறிய புகார்கள் திமுக அரசை புரட்டி போட்டன, இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய செந்தில் பாலாஜி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேச்சு அரசியலின் தன்மையை மாற்றியது.
குறிப்பாக பாஜகவை எப்படி கையாளுவது என தங்களுக்கு தெரியும் என அமைச்சர் சேகர்பாபு பேசியதாக நிருபர்கள் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க, அதற்கு எங்கள் மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம், 17 மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறோம் எங்கள் பலம் என்ன என்று பார்ப்பீர்கள், எங்கள் தலைவர் மோடி இருக்கிறார் என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை.
இந்த பேட்டி கோட்டையிலும் சாமானிய மக்கள் வீடுகளிலும் எதிரொலித்தது, இதைத்தான் விகடன் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம். இது ஒரு புறம் தீவிர அரசியலை எடுத்து சொல்ல , மறுபுறம் மீம்ஸ் கிரேட்டர்கள் விசிக தலைவர் திருமாவளவன், வெளியிட்ட ஒற்றை வீடியோவை வைத்து வச்சு செய்து விட்டனர்.
தமிழகத்தில் சனாதான சக்திகளை வேறு அறுப்போம், பாஜகவை வளர விட மாட்டோம், மோடி அமிட்ஷா மனித குலத்தின் எதிரிகள், திருமாவளவனை பல கோடி கொடுத்தும் அமைச்சர் பதவி கொடுத்தும் வாங்க நினைத்த பாஜகவை நிராகரித்தவர் திருமாவளவன் என விசிகவினரும், அவரது ஆதரவாளர்களும் பில்டப் கொடுத்து கொண்டு இருக்க..
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போகிற வழியில் பார்த்து திருமாவளவன் வைத்த வணக்கம் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, அதிலும் குறிப்பாக கால் ஒரு புறமும் கை ஒரு புறமும் இருந்து வித்தியாசமான முறையில் திருமாவளவன் வணக்கம் வைத்த விதத்தை பார்த்து மிரட்டிய திருமா மிரண்ட அமிட்ஷா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர்.
அதாவது தமிழகத்தில் வீரப்பாக பேசிவிட்டு டெல்லிக்கு சென்றால் அப்படியே உடல் அசைவுகள் பாவனைகளை மாற்ற வேண்டியது என கிண்டல் அடித்தனர்,மேலோட்டமாக இது மீம் போன்று தெரிந்தாலும், "பொதுமக்களை" இந்த தகவல் சென்றடைந்து உள்ளது, தமிழகத்தில் ஒரு பேச்சு டெல்லியில் ஒரு "வணக்கம்" என அரசியல்வாதிகள் இருப்பதாக பொது மக்களே முனு முனுக்கும் நிலையிக்கு கொண்டு சென்றுள்ளது.
மொத்தத்தில் விகடன் போட்ட தரமான கார்ட்டூன், மற்றும் யாரோ போட்ட மீம் இரண்டும் சேர வேண்டிய பொது மக்களை சென்று அடைந்து விட்டது, திருமாவளவன் அமித்ஷாவிற்கு வணக்கம் வைத்த வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.