24 special

அமிட்ஷாவின் வருகையால் ஆடிப்போய் கிடைக்கும் ஆளும் கட்சி..! நடக்க போவது என்ன?

Amutha,mk stalin
Amutha,mk stalin

தற்போது தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணி அரசு பல்வேறு குழப்ப நிலைகளிலிருந்து வருகிறது, குறிப்பாக சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் அதனைத் தொடர்ந்து திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது மற்றும் முதல்வரின் மகன் உதயநிதியின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி சொத்துக்களை முடக்கியது, அதனைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் என திமுக கூட்டணி அரசு தற்பொழுது சிக்கலிலும் குழப்பத்திலும் இருந்து வருகிறது. இந்த குழப்பத்தின் நடுவில் தங்களது கூட்டணிக்கு இடையிலேயே பல விரிசல்கள் ஏற்படும் வகையில் விசிக மற்றும் திமுகவிற்கு பல உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக திமுக இடைஞ்சல்களை சந்தித்து வருகின்ற நிலையில், பாஜக கூட்டணி விறுவிறுவென தங்களது தேர்தல் பணிகளை துவங்க இருக்கிறது, இதன் முதல் கட்டமாக தமிழகம் வருகை புரிய உள்ளார் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா. 


அதாவது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஒன்பது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்க மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ளதால் பாஜக தனது தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இந்த பொதுக்கூட்டம் எட்டாம் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது பாஜக,  இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அமைச்சரின் வருகை ஒட்டி பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த பாஜக மாநில பொது செயலாளர் கார்த்திக் காயின் துணைத்தலைவர் நரேந்திரன், மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் வேலூருக்கு வருவதை உறுதிப்படுத்தியும் அதற்கு ஏற்றவாறு பல்வேறு களப்பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்பட வேண்டுமென்று பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த தமிழ்நாடு பயணத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சந்தித்து உரையாட இருப்பதாகவும் கமலாய வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே ஆளும் திமுக கூட்டணி அரசு தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு அவ்வப்போது இடைஞ்சல்களையும் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தாக்கிய தாகவும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருவதால் அதைப்பற்றியும், யார் யார் எதற்கெல்லாம் காரணம் என அண்ணாமலை கேட்டறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் இந்த கூட்டத்தை பிரமாண்ட முறையில்  நடத்தவும் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது மட்டுமல்லாமல் அமித்ஷாவின் வருகையின் பொழுது  முக்கியமான சிலர் பாஜகவில் இணைய இருப்பதாகவும், அடுத்த ஒரு வருட காலத்தில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்  என்பதை அமித் ஷா திட்டமிட்டு அதனை இந்த தமிழகத்தின் பயணத்தின் போது அண்ணாமலையிடம் தெரிவிக்க உள்ளதாகவும் கமலாயத்திலிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு பிறகு தமிழக பாஜகவின் போக்கில் இன்னும் வேகமெடுக்கும் என தகவல் தெரிவிக்கின்றன. அதுமட்டுல்லாமல் கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தென்னிந்திய மாநிலத்திற்கு வருவது அரசியல் ரீதியாக முக்கியமான பயணமாக பார்க்கப்படுகிறது.