தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி குறித்து விமர்சனம் செய்து இருந்தார், காவல்துறையை ஆளும் கட்சி சார்ந்த பிரமுகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் ஆளும் கட்சியினர் தலையீட்டை தடுக்க சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆனால் அவர் சைக்கிள் ஓட்டுவதை செயலாக செய்து கொண்டு இருக்கிறார் எனவும் குற்றம் சுமத்தி இருந்தார்.
இது கடும் விமர்சனம் ஆனதை தொடர்ந்து சில நாட்கள் பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தனது முகநூல் பக்கத்தில் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் செய்யும் வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் கவி செல்வா என்ற பெண் தன்னை முன்னாள் காவலர் என அறிமுக படுத்திய பின்பு வணக்கம் sir, நீங்கள் DGP யாக பதவி யேற்றப்பிறகு சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. முக்கியமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று காவலர்களின் குறைகளை கேட்பதை காணொளி மூலம் கண்டேன். முன்னாள் காவலர் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.அண்ணாமலை போன்றவர்வர்கள் உங்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.
அவரும் காவல் துறையில இருந்தவர் தான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெரிந்த அண்ணாமலை போன்றவர்களின் வாயை அடக்கா விட்டால் மீண்டும் மீண்டும் பேசுவார்கள். அது ஒட்டு மொத்த காவல் துறைக்கும் இழுக்கு. அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் வரலாற்றுப் பிழை. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்.
தன்மானத்தில் யார் கை வைத்தாலும் மௌனம் காக்காதீர்கள் நன்றி என குறிப்பிட்டு இருக்கிறார், இந்த பெண்மணி தன்னை முன்னாள் காவல்துறை அதிகாரி என்று தன்னை அறிமுக படுத்தினாரே தவிர., திமுக ஆதரவாளர் என்று எங்கும் குறிப்பிடவில்லை மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை வைத்து இருப்பதுடன் பெரும்பாலும் திமுகவினர் பக்கங்களை பின்பற்றியும் வருகிறார் இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் அந்த பெண்மணி தனது கமெண்ட்டில் அவரும் காவல் துறையில இருந்தவர் தான்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெரிந்த அண்ணாமலை போன்றவர்களின் வாயை அடக்கா விட்டால் மீண்டும் மீண்டும் பேசுவார்கள் என அண்ணாமலையை விமர்சனம் செய்வதாக எண்ணி அண்ணாமலை கடமை கட்டுப்பாடு தெரிந்தவர் என குறிப்பிட்டு இருக்கிறார். மொத்தத்தில் காவல்துறை முன்னாள் அதிகாரி என்ற போர்வையில் திமுக ஆதரவாளர் என்பதை மறைத்து காவல்துறை டிஜிபியிடம் கோரிக்கை வைத்த பெண்மணி இறுதியில் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்காமல் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் வரலாற்று பிழை என்று கூறியதன் மூலம் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று அம்பலப்பட்டு போயிருக்கிறார்.