Cinema

#BREAKING நான் உயிரோடு இருப்பதுதானே பிரச்சனை பொருக்கியை "காப்பாற்றும்" ஊர் முக்கிய விவகாரத்தை எடுத்து சொல்லிய சின்மயி !

simmai
simmai

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் சமீபத்தில் சென்னை மாங்காட்டில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது இந்த சூழலில் திரைப்பட பாடகி சின்மயி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அது பின்வருமாறு :-


எங்க கேட்டாலும் சொல்லுவேன். இந்த ஊரு பாலியல் குற்றவாளிகள காப்பாத்தி, survivors ஓட வாய பொத்தி, கதற அடிச்சு சோரு திங்கும் ஊரு. இன்னும் எத்தன நாள்தான் நல்லா இருப்பாய்ங்க அத்தன கூட்டு களவாணிகளும்? கூட்டு களவாணின்னா யாரயோ சொல்றேன்னு நினைக்க வேண்டாம். உங்க புழக்கடையும் பாத்துட்டு இந்த மாதிரி எத்தன ஆளுங்கள நீங்க பொத்தி பொத்தி பாதுகாக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.

ஆனா அதுக்கு வெக்கம் சூடு மனசாட்சி முக்கியமா ரேப் கல்சர பின்பற்றாத மக்களாக இருக்கணுமே.  அது சரி வராது. நீங்க உங்க வேலைய பாருங்கமா நான் உயிரோட இருந்து இன்னும் பேசிட்டு இருக்கேன்றது தான் இங்க வயத்தெரிச்சலே. நானும், குற்றம் சாட்டிய மத்த பெண்களும் இந்த மாதிரி லெட்டர் எழுதி வெச்சு செத்துர்ந்தாலும் அதே பாலியல் குற்றவாளிக்கு தீவிட்டி பிடிக்குற கேவலமான சாக்கடை தான் இது. விருது வழங்கி முடி சூட்டி அழகுபாக்கும் சாக்கடை.

என்னைபோல் பல பெண்கள் ஆண்கள் மாற்றுப்பாலின மக்கள் இருக்காங்க.  ஊர்ல யோக்கியன் வேடம் போட்டுட்டு எவன ரேப் பண்ணலாம்னு சுத்தும் பாலியல் குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் மக்கள்தான் majority. இல்லைன்னா எனக்கெதுக்கு வம்பு? அப்டீன்னு கண்டும் காணாத மாதிரி கண் முன்னாலையே ரேப் நடந்தாலும் பாக்காம போயிட்டு, அவ ஏன் தனியா லேட்டா வந்தான்னு கேக்குற ரேபிஸ்ட்டுக்கு துணை போகும் பழமையான, பாரம்பரியமான சமுதாயம். 

அவனுங்கலாம் நல்லாவே இருக்கானுங்க. கடைசி வரைக்கும் யாரயாச்சும் டார்ச்சர் பண்ணிட்டுதான் போவானுங்க. சொத்துகாக எதுக்கு வேணாலும் துணைபோகும் பாலியல் குற்றவாளிகளின் குடும்பங்கள். இவ்வளவு தான் இந்த கலாசாரம். இந்த போஸ்ட் பிடிக்காட்டா குட்டி செவுத்துல முட்டிக்கோங்க. இன்னிக்கு இன்னுமொரு பெண் குழந்தையோட உயிர் போயிருக்கு. ஒரு (or in this case based on the letter alone) பல பாலியல் குற்றவாளிகள் அவனுங்க வேலைய பண்ணிட்டே தான் இருக்கானுங்க. இந்த எழவெடுத்த கலாசாரம் பாலியல் குற்றம் நடந்தா எங்க தப்பு, எங்க குடும்ப மானம் போகும்னு ஊட்டி வளக்குது. 

போங்கடா நீங்களும் உங்க கேவல ரேப் கல்சரும் என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார் சின்மயி, சின்மயி பலமுறை வைரமுத்து பற்றி தகவல் தெரிவித்த போதிலும் அவரை விருது வழங்கி சிறப்பிக்கவும் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நபருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஆதரவலார்கள் இருக்கும்வரை இந்தநாடு மாறாது என முன்பே சின்மயி பேசியது குறிப்பிடத்தக்கது.