24 special

பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்; திமுக நிர்வாகிகள் கைதில் திடீர் ட்விஸ்ட்!


பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுத்த புகாரில் திடீர் ட்விஸ்ட்டாக அந்த பெண் காவலரே புகாரை வாபஸ் வாங்கியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 


திமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், அந்த கூட்டத்திற்கு காவலுக்குச் சென்ற இளம் பெண் காவலரிடம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. சென்னை விருகம்பாக்கத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாபொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவின் பெண் எம்.பி.க்களான கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த இளம் பெண் காவலரிடம் திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை தாங்க முடியாத அந்த பெண் காவலர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். 

இந்த சம்பவம் தீயாய் சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து திமுக நிர்வாகிகளை அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வெளுத்து வாங்கினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட தனது ட்விட்டர் பக்கத்தில், மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது. 

இதனிடையே விழாவிலேயே திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன், சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் காவல்துறையினரை சூழ்ந்து கொண்ட திமுகவினர் அவர்களை கைது செய்யக்கூடாது என தரம் தாழ்ந்த முறையில் வாக்குவாதம் செய்துள்ளனர். காவல்துறையினரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த திமுகவினர், இளைஞரணி சார்பில் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். 

அதில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் கை கூட்ட நெரிசலில் பெண் போலீஸ் மீது தெரியாமல் பட்டிருக்கலாம் என்றும், இதனை பெரிதுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து பெண் காவலரும் தனது புகாரை வாபஸ் பெற்றதால் அவர்களை கைது செய்யவில்லை எனத் தெரிகிறது. பெண் காவலருக்கு தான் சேர்ந்த கட்சி பொதுக்கூட்டத்திலேயே வைத்து திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததும், கூட்ட நெரிசலில் தெரியாமல் கை பட்டிருக்கலாம் என திமுக இளைஞரணி சார்பில் சப்பைக் கட்டு கட்டப்பட்டதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.