Tamilnadu

துண்டை பறித்தால் பரவாயில்லை வேட்டியை பறிக்கிறார்கள்..! திமுக மீது பாய்ந்த காங்கிரஸ்..என்னதான் நடந்தது !

stallin and congress
stallin and congress

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒன்று இரண்டு சீட்டுக்கள் மட்டுமே ஒதுக்கி திமுக உத்தரவிடும் சூழலில் கூட்டணி கட்சிகளின் மாநில தலைமை வாயை மூடி அமைதியாகி ஏற்று கொண்டு இருக்கின்றன, ஆனால் அதே நேரத்தில் இதர கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.


இந்த சூழலில் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் திமுக மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர், வெறும் 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கியதுடன் அந்த மூன்றும் பெண்களுக்கான வார்டாக இருப்பதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து பிரபல தினமலர் நாளிதழ் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன.இதில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே தி.மு.க., ஒதுக்கியுள்ளது. மற்ற கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்டு மட்டும் ஒதுக்கியுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது.

அவர் கூறியதாவது, "திருநெல்வேலி மாநகராட்சின் 55 வார்டுகளில் ஒரு மண்டலத்துக்கு இரண்டு வார்டுகள் வீதம் 8 வார்டுகள் கேட்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானம் மரியாதையை இழந்து இத்தகைய குறைவான எண்ணிக்கையில் போட்டியிட மாட்டோம். துண்டு போனால் பரவாயில்லை.வேட்டியையே பறிக்கிறார்கள். 

ஒதுக்கப்பட்ட மூன்றும் பெண்கள் வார்டுகள். ஏன் காங்கிரஸ் கட்சியில் ஆண்களே இல்லையா.? தனித்துப் போட்டியிடுவோம். இதுகுறித்து மாநில தலைமைக்கு தெரிவித்துள்ளோம்.

தனித்துப் போட்டியிட கட்சி தலைமை அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு சீட் எதுவும் தேவையில்லை"என்று கூறியுள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பு; இவர்களுக்கு உள்ள மானம், மரியாதை காங்கிரஸ் மாநில தலைவர்க்கும்,தேசிய தலைவர்க்கும் இருக்க வேண்டுமே...? "ஏன் காங்கிரஸ் கட்சியில் ஆண்களே இல்லையா.?" என சங்கரபாண்டியன் கேட்பது இவர்களைதானோ...? மொத்தத்தில் திமுகவை நம்பி அதன் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் திமுகவினர் விசிக கட்சிக்கு உரிய மரியாதை கொடுக்காத காரணத்தால் விசிக தஞ்சையில் தனித்து போட்டி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More Watch Videos