Tamilnadu

நிர்மலா சீதராமன் அறிவித்த "ஒரே நாடு ஒரே பதிவு" இனிதான் இருக்கு மாபியாகளுக்கு கச்சேரி..!

nirmala seetharaman
nirmala seetharaman

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரே நாடு பதிவு எனும் திட்டம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன் அது பின்வருமாறு :-


இந்தியாவின் மிகபெரிய பலம் அதன் நிலம், நிலமென்றால் முழுக்க அளந்து சர்வே நம்பர் கொடுக்கபட்டு முறையாக நிலவரியும் இதர நிர்வாகமும் செய்யும் அளவு அடிப்படை வசதி கொண்ட ஒரு நில நிர்வாகம்.

இந்தியாவில் எப்பொழுதுமே நிலங்கள் அளக்கபட்டிருந்தன, பண்டைய காலங்களில் அதன் அளவு குழி, வேலி, மா, காணி என பல அளவை வழிகள் இருந்தன, அதில் மிக சரியாக நிலவரி வசூலிக்கபட்டது, இந்த வரிதான் இந்தியா செல்வந்த நாடாகவும் நல்ல நிர்வாகம் கொண்ட நாடாகவும் அன்று நிலைக்க வழிசெய்தது.

பின்னாளைய ஆப்கானிய ஆட்சியில் இது கொஞ்சம் சீரழிந்தது, ஆப்கானியர் ஆட்சி காட்டுமிராண்டிதனமான வரிகொடுமையும் இதர சுரண்டல்களும் கொண்டதாய் இருந்தது, எனினும் நில அளவைகளில் பெரிய மாற்றமில்லை

வெள்ளையன் வந்ததான் அவனும் தொடக்கத்தில் நிலவரியினை பிரித்து நவாபுக்கு கொடுக்கும் கூலிவேலைதான் செய்தான் அதில் இந்திய நில அமைப்புகளை அப்படியே உள்வாங்கினான்.

அவன் ஆட்சி அமைந்தபின் இந்த அமைப்பினை அப்படியே மாற்றினான், அவன் நினைத்திருந்தால் இந்தியாவின் பண்டைய நில அளவையினை அப்படியே தொடர்ந்திருக்கலாம், ஆனால் நாடெல்லாம் ஒருமாதிரி அளந்து சர்வே நம்பர் என ஒரு அடையாளமிட்டு ஏக்கர், ஹெக்டேர் என என்னென்ன பெயர்களையெல்லாமோ புகுத்தினான்.

அவனின் பிரதான நோக்கம் நில அளவை அல்ல மாறாக இந்தியாவின் அதிக நிலங்கள் கோவிலுக்கும் மடங்களுக்கும் இருந்தன அவற்றை குலைத்து அதை என்னவெல்லாமோ மாற்றி கோவிலின் நிலங்களை குறைத்து அரச நிலம் இன்னும் பல நிலமாக மாற்றினான், இதனால் இந்திய ஆலயங்கள் பலம் குறையும் சமூகத்தில் சில குழப்பங்களும் கூடும் என்பது அவன் கணக்காய் இருந்தது, இன்று இந்து ஆலயங்களுக்கு இருக்கும் நிலங்களெல்லாம் அன்றைய நிலமதிப்பினை ஒப்பிடும் பொழுது மிக குறைவே.

அந்த வெள்ளையன் கால சர்வேக்கு பின் நிலங்கள் பற்றிய பெரும் திட்டம் இந்திய அரசிடம் இல்லை, இதில் மாநில கட்சிகளின் ஆட்கள் ஆங்காங்கே புகுந்து விளையாடினார்கள் தமிழகத்தில் என்னவெல்லாமோ நடந்தது, ஜெயலலிதா அரசு "நில அபகரிப்பு சட்டம்" என ஒன்றை இயற்றும் அளவு நிலமை மோசமானது.

நிலம், தங்கம், பசு இம்மூன்றும் எக்காலமும் பாதுகாப்பான முதலீடு என்பதால் நிலம் இன்று மண் தங்கம் என சொல்லபடும் அளவு மதிப்பாயிற்று, ஒரு காலத்தில் விளை நிலங்கள் விலையாய் இருந்தன பின்னர் கடைவீதி நிலங்கள் மதிப்பாயின, கடற்கரையின் மணற்பாங்கும் துறைமுகங்களால் விலையாயின‌.

இன்று நிலவிலை உச்சத்தில் இருக்கின்றது, நிலம் பினாமி சொத்து, கருப்பு பண இருப்பு, முறையற்ற பணத்தின் முதலீடு என பல விஷயங்களுக்கு பயன்பட்டு மிகபெரிய கருப்புபண பதுக்கல் நிலத்தில்தான் இந்தியாவில் முடக்கபட்டது, இதுவரை இதுபற்றி கவலைபட்டோர் யாருமில்லை இப்பொழுதுதான் நாடு முழுக்க "ஒரே நாடு ஒரே பதிவு" என திட்டம் அறிமுகமாகின்றது

இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இனி பத்திரபதிவு, சொத்து வாங்குதல் விற்றல் எல்லாம் ஒரே கண்காணிப்பில் வரும், இதற்கு வங்கி எண், ஆதார் எண் இன்னும் பல ஆவணங்கள் அவசியமாகும் பொழுது முறையற்ற பதிவுகளும் , மோசடி விற்பனையும் தடுக்கபடும்.

இது மெல்ல மெல்ல இந்திய நில ஆவணங்களை டிஜிட்டலாக்கும் முயற்சி காகித பத்திரங்களில் இருந்து இந்திய நிலங்கள் பராமரிப்பினை டிஜிட்டலுக்கு மாற்றுகின்றது மத்திய அரசு, இது மாபெரும் புரட்சி, புது புரட்சி

இனி மாபெரும் கருப்பு பண முதலீட்டை தடுக்கும், இது காலம் வறண்ட நிலம் நீரை உறிஞ்சுவது போல பெரும் பணத்தை இழுத்து தேசத்தின் பணசுழற்சியினை தடுத்த நிலங்கள் இனி ஆற்றடி நிலம் போல பணவெள்ளத்தை தேசத்தில் ஓட செய்யும்.

தங்கம் போல நிலமும் அதை சார்ந்த பணவரவும் மிக மிக பெரியது மதிப்பானது, மிகபெரிய சீர்திருத்ததை அறிவித்திருக்கின்றார் நிர்மலா சீத்தாராமன், பெரும் சீர்திருத்தங்களை அறிவித்து கொண்டிருப்பதால் இனி அவர் பெயர் நிர்மலா சீத்தாராமன் அல்ல, நிர்மலா "சீர்திருத்த" ராமன்

ஆம், ராமன் ஆட்சியில் நில சீர்த்திருத்தங்கள் மிக சிறப்பாக தொடங்கபட்டிருப்பதால் அவரை அப்பெயரில் தயக்கமின்றி அழைக்கலாம், அவர் இந்தியாவுக்கு கிடைத்த நிதியமைச்சர்களில் ஒரு கோபுரமாக மின்னி கொண்டிருக்கின்றார்என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

மொத்தத்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்தபின்பும் நில பினாமிகள் சிக்குவதுடன் கோவில் நிலங்களை கையக படுத்துதல் போன்ற நடைமுறைகள் முழுமையாக குறைக்கப்படும் எனவும், ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றம் சென்றால் வழக்கு சிறிது காலத்திலேயே முடிவிற்கு வந்துவிடும் எனவும் உறுதியாக நம்பப்படுகிறது. நிலத்தை சுரண்டும் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நில மாபியாகளுக்கு இனிதான் இருக்கு கச்சேரி.

More Watch Videos