நாடாளுமன்ற கூட்ட தொடரில் குடியரசு தலைவர் உரையின் மீது நடந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது. அதாவது, பேச்சுவார்த்தை நடத்துவது, உரையாடுவது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சகோதரனிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறேன். அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்கிறார். அவர் எனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்கிறார். நான் எனக்கு இது வேண்டும் என்கிறேன். இது ஒரு கூட்டாட்சி.இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. உங்களால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை. நீட் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை. என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் நாடாளுமன்ற கூட்ட தொடர் முடிந்த பின்பு செய்தியாளர் ஒருவர் ஏன் தமிழகம் குறித்து முக்கியதுவம் கொடுத்து பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு நான் தமிழன் எனவும் விளக்கம் கொடுத்தார் ராகுல். வழக்கமாக தேர்தல் வரும் நேரத்தில் வட மாநிலங்களில் நான் ஒரு இந்து நான் ஒரு கவில் பிராமணன் என குறிப்பிடும் ராகுல் ஏன் இப்போது தமிழன் என குறிப்பிடுகிறார் இதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்தது.
நகராட்சி தேர்தலில் திமுக நம்மை ஒரு கூட்டணி கட்சியாக கூட கருதவில்லை மாறாக நாயை போல நடத்துகிறார்கள், என்னை வெளியே போ என விரட்டி விட்டார்கள் சென்னையில் 200 இடங்ககளை கொண்ட மாநகராட்சியில் வெறும் 4 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.
என்று ராகுலிடம் புலம்பி இருக்கிறார் ஜோதிமணி மேலும் எப்படி கேரளாவில் பிணராயி விஜயன் அரசிற்கு சாதகமான சூழல் இருந்த நிலையிலும் நீங்கள் வயநாட்டில் போட்டியிட்ட காரணத்தால் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் கேரளாவில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதற்கு நீங்கள் அங்கு போட்டியிட்டதே காரணம் மேலும் நாம் கேரளாவில் லோக்சபாவில் பெற்ற வெற்றியை மாநில சட்டமன்ற தேர்தலில் பெற முடியவில்லை இதற்கு முழுக்க முழுக்க மக்கள் உங்களை ஏற்று கொண்டதே காரணம்.
அதே போல் இந்த முறை நீங்கள் தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் அது கன்னியாகுமரியாக இருந்தால் கேரளா தமிழ்நாடு என இரண்டு இடங்களில் எதிரொலிக்கும் நம்மை மதிக்காத பலரும் இனி இறங்கி வருவார்கள் என ராகுலுக்கு ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்துதான் ராகுல் தமிழகத்தை பாஜக ஒரு போதும் ஆட்சி செய்ய முடியாது என குறிப்பிட்டு இருக்கிறாராம். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை என்ன என ராகுலுக்கு தெரியுமா? திமுக கூட்டணியில் இல்லை என்றால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாது இதுதான் உண்மை பார்க்கலாம் ராகுல் காந்தி தமிழகத்தில் கால்பதிக்கட்டும் பார்க்கலாம் என இப்போதே எதிர்ப்பு குரலை பதிவு செய்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.
இது ஒரு புறம் என்றால் ராகுல் தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்யமுடியாது என குறிப்பிட்டதை பாஜகவினர் வரவேற்று வருகின்றனர் இப்படித்தான் பாஜகவால் ஒரு போதும் வட மாநிலத்தை தாண்டி வெற்றி பெற முடியாது என்றார்கள் கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறது, தெலுங்கானா மாநிலத்தில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது.
மேலும் ராகுல் கடந்த முறை மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பே இல்லை என கூறினார் ஆனால் 2014-ம் ஆண்டை காட்டிலும் 2019-ல் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றார் மோடி அதே போல் தமிழகத்திலும் ராகுலின் வாய் முகூர்த்தம் பலிக்கும் என்கின்றனர் பாஜகவினர்.
More Watch videos