காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நேற்று மக்களவையில் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் பாஜகவால் ஒரு போதும் ஆட்சி செய்ய முடியாது தமிழர்கள் உங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பேசி இருந்தார்.
இந்த சூழலில் ராகுல் கருத்தை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர் ஒன்று ராகுல் கூறிய எதுவும் தலைகீழாகதான் நடக்கும் மற்றது இனி எங்கள் தேசிய தலைமை மிக பெரிய அளவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முழு முயற்சி மேற்கொள்ளும் என கூறிவருகின்றனர், இது குறித்து பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு :-
"ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது" - நேரு, "ஜனசங்கம் எனும் பண்டார கூட்டத்தை தேசம் ஒரு பொருட்டாக கருதாது" - இந்திரா "பாரதீயஜனதா எனும் கட்சியெல்லாம் ஆட்சிக்குவரும் என கனவு கூட காணமுடியாது" - ராஜிவ்
"தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கவே முடியாது" - ராகுல் ஆக தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததையோ அதை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்து இப்பொழுது காங்கிரஸை தன் டெல்லி பிரிவு போல மாற்றி வைத்திருப்பதையோ மறந்தே விட்டார் ராகுல்
ஒரு உள்ளாட்சி தேர்தலிலே தன் கட்சி எம்பியினை திமுக கதறவைத்து அனுப்பும்பொழுது டெல்லியில் திமுகவின் பிரதிநியாக பேசும் ராகுலாரை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது, உபியில் ஓருஇடம் கூட வெல்லமுடியா நிலையில், பஞ்சாபில் காங்கிரஸுக்கு கல்லறை கட்டபடும் நிலையிலும் தமிழ்நாட்டின் திமுகமேல் காங்கிரஸ் தலைவருக்கு பாசம் பெருகுகின்றதென்றால்.,
காங்கிரஸுக்கு கடைசி ஆணி அடிக்கபடுகின்றது அல்லது அன்றே திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இருந்த ரகசிய ஒப்பந்தம் வீதிக்கு வருகின்றது என்பதை தவிர என்ன சொல்லமுடியும் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.மொத்தத்தில் தமிழகத்தில் நான்கு தாமரை மலரந்த சூழலில் விரைவில் பல இடங்களில் தாமரை மலரும் என எதிர்பார்க்கலாம்.
More Watch Videos