24 special

அண்ணாமலையை விமர்சனம் செய்து எடப்பாடியை சிக்கவைத்த கடம்பூர் ராஜு

annamalai , edapadi
annamalai , edapadi

அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் தற்போது பாஜக உறவை எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே உடைத்துவிட்டு வெளியேற முடிவு செய்து இருக்கிறார்களாம். அதில் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.மத்திய பாஜக தலைமை மீது எந்த விமர்சனமும் வைக்காமல் அதே நேரத்தில் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனம் வைக்க பல முன்னாள் அமைச்சர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம் இந்த சூழலில் அண்ணாமலை மீது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வைத்த விமர்சனம் நா கூசும் அளவிற்கு சென்று இருக்கிறது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கடம்பூர் ராஜுசட்டப்பேரவையில் அம்மாவின் சிங்கம் பார்வைக்கு  அமைதியாக இருந்தவர்கள்  காலம் எல்லாம் உண்டுகேவலம் அண்ணாமலை அரசியலுக்கு ஒரு கத்துக்குட்டிஉங்கள் வீட்டு அம்மாவை புகழ்ந்து பேசினால் தான் வீட்டில் சோறு கிடைக்கும் என்றால் புகழ்ந்து பேசுங்கள் அதற்கு நாங்கள் இடைஞ்சலாக இல்லை ஆனால் புரட்சித்தலைவி அம்மாவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது அம்மாவுக்கு நிகர் அம்மா தான்

தமிழனுடைய உரிமையை பெருமையை டெல்லியில் நிலைநாட்டிய பெருமை புரட்சித்தலைவி அம்மாவையே சாரும், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்று எம் எல்.ஏ ஆகியுள்ளார் நயினார் நாகேந்திரன்  அதற்காக நாங்கள் என்ன அவரிடம் சண்டையா போட்டோ அவர்களிடம் என்ன பஞ்சாயத்தா  வைத்தோம்.ஒற்றை தலைமை என்று அன்றைக்கு இந்த நிலைமை வந்திருந்தால் நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு சென்று இருக்க மாட்டார்

ஐபிஎஸ் முடித்துவிட்டு பதவி மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை ஆட்சி மாற்றம் வந்தால் திரும்பவும் ஐபிஎஸ் வேலைக்கு தான் செல்ல வேண்டும்.தேர்தல் நேரத்தில் அதிமுகவில் வேட்பாளர் என்ற அறிவிப்பே வேட்பாளருக்கு  பெருமை வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜம்அரசியல்வாதி பேச்சை அளந்து பேச வேண்டும் மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார் போல அண்ணாமலைக்கு அது ஒரு வியாதி செய்தி தொலைக்காட்சிகள் அண்ணாமலை பேச்சை கேட்டால் சேனலை மாற்றக்கூடிய அளவிற்கு மக்கள் வந்து விட்டார்கள்

புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி பேசியவர்களுக்கு அழிவு தான் ஆரம்பம்அதிமுகவை உரசி  பார்த்தால் தீ குழம்பாக எரியும்  என்று எச்சரிக்கிறேன்  என பேசி இருந்தார் கடம்பூர் ராஜு.அண்ணாமலை எங்குமே தனது பேச்சில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யவில்லை மாறாக ஜெயலலிதா, கருணாநிதி போன்று தானும் உறுதியான முடிவுகளை எடுப்பேன், மேனேஜர் போன்று இருக்க மாட்டேன் பாஜகவை தமிழகத்தில் ஜூனியர் கட்சியாக வைத்து இருக்க மாட்டேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

அப்படி இருக்கையில் வேண்டும் என்றே ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தவறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கூட்டணி கட்சியின் மாநில தலைவரை ஒருமையில் பேசியது டெல்லி வரை எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது, வழக்கமாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வீர வசனம் பேசிவிட்டு டெல்லி சென்றால் காலில் விழாத குறையாக பல்டி அடிப்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை அதிமுகவில் சிலரது உண்மையான முகம் என்ன என ஆதராங்களோடு பட்டியல் போட்டு அண்ணாமலை கொடுத்து இருப்பதால் கூட்டணியில் குழப்பம் உண்டானால் அது அதிமுக பொறுப்பில் இருக்க கூடிய பல முன்னாள் அமைச்சர்களுக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதால் பலர் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதால் அதன் முடிவுகள் எது போல இருக்கும் என அதிர்ந்து போயிருக்கிறதாம், இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜகவையும் அதன் மாநில தலைவரையும் ஒருமையில் பேசுவது நிச்சயம் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று அடித்து கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.

அதிமுக பாஜக உடனான உறவை முறித்து கொண்டால் படு தோல்வியை சந்திக்குமே தவிர திமுக கூட்டணியை வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் பாஜக கூட்டணியை உடைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த பலர் முயற்சி செய்வது உண்மையில் திமுகவிற்கு மறைமுகமாக உதவும் எண்ணம் இருப்பதாகவும் அதில் வெற்றியும் பெற்று வருவதாகவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.