24 special

வசமாக சிக்கிய சீமான்... சிறப்பான சம்பவம் செய்த வானதி ஸ்ரீனிவாசன்..!

vanathi Srinivasan  , seeman
vanathi Srinivasan , seeman

கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மொத்தம் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், அந்த 20,000 வாக்குகளுமே வட இந்தியர்கள் போட்ட வாக்குதான் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியதை நக்கலாக கலாய்த்துள்ளார் வானதி.


தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு  சீமான் அளித்த பேட்டியில் வட இந்தியர் தொடர்பாக கூறியதாவது: நீ நீயாக இரு.. நான் நானாக இருக்கிறேன். எல்லோரும் மொழிவழி மாநிலமாக பிரிந்து போய்விட்டீர்கள். எனக்கென்று இருப்பது இந்த ஒரு நிலம்தான் .இந்த நிலத்தின் அதிகாரத்தை எனக்கு கொடுத்துப் பார். நான் என் நிலத்தைப் பாதுகாப்பேன். தெருக்களில் தமிழ் இருக்கிறதா? என் மொழி செத்து போயிருச்சு.

ஆந்திரா காட்டுக்குள் 20 பேரை சுட்டுக் கொன்றார்களே.. அப்போது நீங்கள் எனக்காக பாவம் என்று பேசினீர்களா? 20 மீனவரை ஒரே சங்கிலியில் இழுத்துக் கொண்டு போன போது யாரேனும் என் மீனவனுக்காக குரல் கொடுத்தீர்களா..?செம்மரக் கட்டை வெட்ட வந்தவர்கள் என கூறி ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். செம்மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளி தமிழன் எனில் அதை வெட்ட சொன்ன முதலாளி யார்? அவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை இதனை யாரும் தட்டிக் கேட்டார்களா? நான் முதல்வராக இருந்தால் என் தமிழ் பிள்ளைகளை யாரேனும் தொட விட்ருவனா..?தமிழ்நாட்டில் ஒன்றரை கோடிப் பேர் வட மாநிலத்தவர் இருப்பது உண்மைதான் அதில் 75 லட்சம் பேருக்கு வாக்குரிமை பெற்றுவிட்டார்கள்,இப்ப அம்மா வானதி சீனிவாசன் கோவையில் வெல்றாங்க.. அந்த தொகுதியில் 20,000 வாக்கு வித்தியாசம். 20,000 வாக்கும் வட இந்திய வாக்கு. அவங்க எல்லோரும் பிஜேபி ஓட்டர்ஸ்.. அதனால் பேசமாட்டாங்க. காங்கிரஸ் வாக்கும் இல்லை. திராவிட கட்சிக்கும் இல்லை. சுத்தமாக எனக்கும் இல்லை. அவன் யாருக்கு போடுவான்?. என்று சீமான் பேசியிருந்தார்.

ஆனால் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக சீமான் சொல்வது உண்மைக்கு மாறானது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு அனைவரும் கவனித்த நட்சத்திர தொகுதி. மேலும் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாஜக வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசம்தான் இருவருக்கும் இடையே இருந்தது. இறுதியாக 1728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வானதி சீனிவாசனுக்கு மொத்தம் 53,209; கமல்ஹாசனுக்கு மொத்தம் 51,481 வாக்குகள் கிடைத்தன. வானதி சீனிவாசனுக்கும் கமல்ஹாசனுக்குமான வாக்கு வித்தியாசம் 1728 என்பதை 20,000 என சீமான் கூறியது கேள்விக்குள்ளானது.

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் சீமான் கருத்துக்கு நகைப்புடன் பதிலளித்துள்ளார். அதில், சீமான் சொல்வது போல 20,000 பேர் எல்லாம் இல்லை. ஒரு 4,000- 5,000 வட இந்தியர்கள் என் தொகுதியில் இருப்பார்கள். பல்வேறு துறை சார்ந்தவர்கள். மாநில பிரிவினைக்கு முன்னரே பல தலைமுறைகளாக இங்கே குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். பெங்களூர் எம்ஜி ரோட்டில் பெரும்பாலான சொத்துகள் தமிழர்களுடையதாக தான் இருக்கிறது. சீமானின் இந்த கருத்து மூலம் அவரது கற்பனை வளம் வெளிப்பட்டிருக்கிறது. சீமானின் கற்பனை வளம் பொதுவாகவே அதிகமாக இருக்கும். ஒரு சினிமா இயக்குநர் என்பதால் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். என் தொகுதியைப் பொறுத்தவரை அதிக கற்பனை வளம் கொண்டவராக சீமான் இருக்கிறார் என சிரித்தபடியே பதில் அளித்தார் வானதி சீனிவாசன்.