24 special

பல்டி அடித்த நடிகர் சூர்யா அடுத்த கதை காந்தாரா பாணியில்...!

suriya
suriya

ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் ட்ரெண்ட் கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை காட்டிலும் முழுவதுமாக மாற இருக்கிறது அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா மீண்டும் 90களில் இருந்த காலத்திற்கு மாற இருப்பதை அறிந்த பலர் மிரள ஆரம்பித்து இருக்கின்றனர்.


தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாக்களில் இந்தியர்களின் கலாசாரத்தை சிறுமை படுத்தும் வகையிலும் குறிப்பாக இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்று வந்தன, நாட்டு பற்று, இராணுவம் என அனைத்தையும் சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் திட்டமிட்டு பொதுமக்கள் மத்தியில் தவறாக சித்தரித்து திரைப்படங்களை எடுத்தனர்.

வியாபார ரீதியாக அப்படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே நிலையை நீடித்தது, ஆனால் 2014 - ம் ஆண்டிற்கு பிறகு ட்ரெண்ட் மெல்ல மாறியது, இந்திய கலாசாரத்தை உயர்த்தி பிடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற தொடங்கின குறிப்பாக பாகுபலி திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.அதன் பிறகு RRR திரைப்படம் வெளியாகி அதில் இடம் பெற்ற பாடல் ஆஸ்கார் விருதையும் பெற்று இருக்கிறது, இப்படி இந்திய சினிமா ட்ரெண்ட் மாறி வர தொடர்ச்சியாக தமிழகத்தில் மட்டும் குறிப்பிட்ட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இணைந்து பிரிவினையை விதைக்கும் விதமான படங்களை எடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த இயக்குனர்கள் நடிகர்கள் படங்கள் கடும் எதிர்வினையை சந்தித்து வருவதால் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் குதிரை கொம்பாக உள்ளதால் தாங்களே திரைப்படத்தை தயாரிக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்களாம்.அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படமும் ஜெய் பீம் திரைப்படமும் சூர்யாவிற்கு எந்த அளவு புகழை கொடுத்ததோ அதே அளவு எதிர்ப்பையும் கொடுத்தது, இந்த சூழலில் ஜெய் பீம் கதை கருவுடன் ஒரு இயக்குனர் சூர்யாவை அணுகி இருக்கிறார் ஆனால் சூர்யாவோ தற்போது நான் வேறு மாதிரியான கதையை தேர்வு செய்ய இருக்கிறேன் பிறகு பார்த்து கொள்ளலாம் என திருப்பி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது வரும் நாட்களில் கொங்கு கலாசாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிக்க சூர்யா கதையை கேட்டு வருகிறாராம் அதில் முழுக்க முழுக்க இந்துக்கள் பாரம்பரியம் இருக்கும் வண்ணம் கதை கருவை அலசி ஆராய்ந்து சூர்யா கதை கேட்டு வருகிறாராம்.சூர்யா மீதான முத்திரயை அகற்றும் வண்ணமும் பொதுவான கதை களத்தை தேர்வு செய்யும் வண்ணமும் திரைப்படங்கள் எடுக்க சூர்யா முயன்று வருகிறாராம்.ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ட்ரெண்ட் மாறியுள்ள நிலையில் காந்தாரா போன்ற திரை கதையை தேர்வு செய்து சூர்யா நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் சூர்யாவிற்கு நெருக்கமானவர்கள்.

கன்னட தெலுங்கு திரைப்படங்கள் இந்திய அளவில் அதிக வசூலை குவித்து வரும் சூழலில் தமிழ் கலாசாரம் சார்ந்து ஒரு படம் வெளியாகி இந்திய அளவில் முத்திரை பதிக்காதா என பல தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க அந்த காலம் விரைவில் வரும் என்கின்றன தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் தெரிந்தவர்கள்.90களில் இருந்தது போன்று எந்த மதம், சமுதாயம், நாட்டு பற்று போன்றவற்றை இழிவு படுத்தாத நிலைக்கு தற்போதைய சினிமா துறையினர் வந்து இருப்பதற்கு முக்கிய காரணமே தெலுங்கு கன்னட திரைப்படங்களின் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியான வெற்றி தான் என்று கூறப்படுகிறது.