
அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் அமித்ஷா அலுவலகத்திற்கு செல்லும் மர்மம்!தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தேசிய அரசியலில் ஈடுபடும் முயற்சி, அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் என சுற்றிலும் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அறிவாலய தலைமை அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது, குறிப்பாக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 2019 ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே 38 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணமாக இருந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைமை இந்த முறை நாம் விடக்கூடாது, விட்டால் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இல்லாமல் போய்விடும் என்று தெளிவாக தெரிந்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜகவும் தங்கள் தரப்பை விட்டுக் கொடுப்பதாக இல்லை, திமுகவின் திட்டங்கள் மற்றும் ஊழல் விவகாரங்கள் என அனைத்தையும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என அமித் ஷா கட்டளை இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் அரசியல் பணிகளை விட பாஜக தனது அரசியல் வேலைகளை இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே தொடங்கியுள்ளது என்று கூறும் வகையிலே பல அதிரடி திருப்பங்கள் மற்றும் உண்மை பதிவுகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பாஜக வெளியிட்டு வருகிறது. அதிலும் திமுக கையாண்ட ஊழல் விவகாரங்கள் ஒவ்வொன்றையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. அந்த வரிசையில் தான் பி டி ஆரின் ஆடியோ பதிவு, கள்ளச்சாராய சாவுகள், விளையாட்டுத்துறையில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு, மத்திய அரசின் கல்வி நிதியை தமிழக அரசு குறைத்திருப்பது என்று திமுகவின் பல விவகாரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவருகிறது பாஜக, அந்த அளவிற்கு இறங்கி வேலை பார்த்து வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள திமுகவும் அவர்கள் தரப்பிற்கு ஏதோ ஒரு காரணத்தை கூறி பாஜகவின் சில முக்கிய பிரமுகர்களையும் கைது செய்கிறார்கள் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக அடுத்த மாதத்தில் தனது இரண்டு அஸ்திரங்களை கையில் வைத்துள்ளது, ஒன்று திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாவது பாகம் வெளியீடு, மற்றொன்று என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை!இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷா தமிழகம் வருகை தந்த சமயம் மின்தடை ஏற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அரசியல் இல்லை என்று கூறிவிட்டாலும் அமித் ஷா விடுவதாக இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் காரணமாகவே அறிவாலய வட்டாரத்தில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளையும் டெல்லி தலைமையகம் உற்று கவனித்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகம் மிகவும் கவனமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. திமுக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களை பற்றிய செய்திகள் உடனுக்குடன் உள்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது முதல்வர் குடும்பம் மற்றும் அறிவாலய தரப்பு அனைவரும் என்னென்ன செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி முழுமையாக ஆராய்ந்து மத்திய உளவுத்துறை அமித் ஷாவிற்கு தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதிலும் கவர்னருக்கும், திமுக விற்கும் இடையே இருக்கும் பிரச்சனையில் ஆளுநரின் கையே ஓங்கி உள்ளதாகவும் திமுகவின் சில அதிருப்தி தலைவர்கள் ஆளுநர் பக்கத்தில் இருப்பதாகவும் அவர்களே ஆளுநருக்கு சில முக்கிய தகவல்களை அளிப்பதாகவும், இந்த தகவலும் அமித் ஷாவிற்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஆக மொத்தம் ஏற்கனவே இருக்கும் ஊழல்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்து திமுக வெளியில் வர நினைத்தாலும் அது முடியாது, அதையும் மீறி ஏதேனும் நகர்வுகளை திமுக மேற்கொண்டால் அதனைத் தவிடுபொடியாக்கும் விதமாக அமித் ஷா தீவிர கண்கணிப்பில் இருப்பதால் திமுகவிற்கு மேலும் சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.