24 special

கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியனை சரமாரி கேள்வி கேட்ட அண்ணாமலை...!

Annamalai , kanimozhi
Annamalai , kanimozhi

நாடாளுமன்றத்தில் பெண்கள் உரிமைகள் குறித்து பேசும் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பெண் காவலருக்கு திமுகவினர் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் இன்னும் இரண்டு திமுகவினரை கைது செய்யவில்லை என நேரடியாக கேள்வி எழுப்பி இருப்பதால் அடுத்த கட்டத்திற்கு நிகழ்வு சென்று இருக்கிறது.


விருகம்பாக்கம் தசரதப்புரம் அருகே நேற்று இரவு நடந்த அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  தி மு க வின் இரு பாராளுமன்ற பெண்  உறுப்பினர்களான கனிமொழி மற்றும்  தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதும், போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தும், பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த திமுக கட்சியினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், திமுக எம்எல்ஏவான பிரபாகரன் ராஜா பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என போலீசாரிடம்  கேட்டுக்கொண்ட பின்ப பிடித்த இருவரையும் போலீசார் எச்சரித்து விடுவித்து இருப்பது பொதுமக்களிடையே, சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் தி மு க அரசில், தி.மு.கவினரால் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவது, தி.மு அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துகிறது. பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு குறித்து பேசும் கனிமொழி  கண்ணெதிரிலேயே இந்த குற்றம் நடைபெற்றும், வாய் மூடி மௌனம் காப்பதும், பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த  நபர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றம் ஆகிய பிரிவுகளில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்,சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி @KanimozhiDMK அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் இதையே பொதுமக்களில் யாராவது ஒருவர் பெண் காவலரை அல்லது பெண்களை சில்மிஷம் செய்தால்? அல்லது கிண்டல் செய்தால் இப்படிதான் சும்மா விடுமா காவல்துறை ? இந்தியாவில் எங்காவது ஒரு மாநிலத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக மகளிர் அணியினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தும் பொழுது, 

தமிழகத்தில் அதுவும் தலைநகர்  சென்னையில் ஒரு பெண் காவலரை பொது இடத்தில் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்ட திமுக இளைஞர் அணியினருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்களா என சோசியல் மீடியாவில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்வுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ? திமுக கட்சியின் இந்த அராஜகத்தை தட்டி கேட்குமா தமிழக காவல் துறை? இதுதான் திமுகவினர் சொல்லும் பெண்ணுரிமையா , பெண்கள் சமூக நீதியா என சோசியல் மீடியாவில்   பாஜகவினரும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.