பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா அடைந்த உயரத்தை பாஜக ஆதரவாளர் ஒருவர் பட்டியல் போட்டுள்ளார், இந்த பட்டியல் இணையத்தில் மட்டுமல்ல அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது.
விவசாய சட்டதிருத்தத்தை பிரதமர் மோடி திரும்ப பெற்றார் என்ற அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நடைபெற்ற மாற்றங்கள் என்ன என்று ஒரு பட்டியலே போட்டுள்ளார் SV கணேசன் என்பவர் இதுகுறித்து இணையத்தில் வைரலாகும் தகவல் பின்வருமாறு :
உலகின் சக்தி வாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பிரிட்டனில் நடக்கும் 53 நாடுகள் மாநாட்டின் பொதுத் தலைவராக மோடிஜி பதவியேற்கிறார்.பிரிட்டனின் காலனியில் இருந்த காலத்திலிருந்து இந்தியாவை இந்த உயர் நிலைக்குக் கொண்டு சென்றார் மோடி அவர்கள்.
ஜிஎஸ்டி மாத வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்து விட்டது. புதிய சூரிய மின் சக்தி நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தையும், மொத்த சூரிய ஆற்றல் உற்பத்தியில் உலகில் 4வது இடத்தையும் பெற்றுள்ளது.
ஜிடிபி பொறுத்தவரை சீனா 6.7% மற்றும் அமெரிக்கா 4.2%, இந்தியாவின் ஜிடிபி 8.2°/° அளவைத்தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது, பொருளாதார வளர்ச்சியில் பிரான்சை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சமீபத்திய பொருளாதாரத் தரவரிசையில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது., வாகன சந்தையில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நம் நாடு 4வது இடத்தை பிடித்துள்ளது.
மின்சார உற்பத்தியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்தை நோக்கி வளர்ச்சி பெற்று உள்ளது, உலக அளவில் ஜவுளி உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தைப் பிடித்துள்ளது, மொபைல் தயாரிப்பில் இந்தியா இப்போது உலகின் நம்பர் 2 வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் எஃகு உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து பிரேசிலை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து உள்ளது.
லேட்டஸ்ட் புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் இராணுவ வீரர்களுக்கு வாங்கப்பட்டுள்ளது, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை அடைந்து இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
உலகின் அதிநவீன ஏவுகணையான எஸ்-400, அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது., ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டின் பணம் எங்கே எங்கே போனது என்று யோசித்துப் பாருங்கள்
இதை படிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும். தன்னை இந்தியன் என்பதில் பெருமை கொள்ள வைக்கிறது அதனால் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடிய அதிகமான இந்தியர்களாக உருவாகுவோம். பாரத அன்னை வெல்க என அந்த தகவல் பரவி வருகிறது.
பிரதமரின் ஆட்சியை விமர்சனம் செய்யும் நபர்கள் மேலே உள்ள சாதனை பட்டியலுக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்பதுதான் பாஜகவினர் இப்போது எதிர்கட்சிகளை பார்த்து கேட்கும் கேள்வியாக உள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.