பிரபல எழுத்தாளர் சுந்தர்ராஜசோழன் விவசாய சட்ட திருத்தத்தை பிரதமர் வாபஸ் வாங்கிய நிலையில் யாருக்கு இழப்பு, அமிட்ஷா ராஜ்நாத் சிங் உள்துறை செயல்பாடுகளை ஒப்பிடவர்களுக்கு தனது எழுதின் மூலம் பதில் அளித்துள்ளார் அவை பின்வருமாறு :-
இந்தியா முழுக்க விவசாயிகள் காலம் காலமாக எதற்கு போராடினார்களோ? அதற்கு நல் விடையாகத்தான் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார்.காங்கிரஸ் கொண்டு வர நினைத்தும் செயல்படுத்த முடியாத சட்டம்..வாக்கரசியலை விட மக்களின்,தேசத்தின் நலமே முக்கியமென பல முடிவுகளை நரேந்திர மோடி எடுத்தது போலவேதான் இந்த சட்ட நிறைவேற்றத்தையும் செய்தார்..
ஆனால் சீக்கிய ஜாட்டுகளின் எதிர்ப்பு போராட்டம் அளவிற்கு ஹிந்து விவசாயிகளின் ஆதரவு வலிமை வாய்ந்ததாக இல்லை என்பது புரிகிறது.மோடி நேற்றே தெளிவாக சொல்லியுள்ளார்,இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை மொத்த விவசாயிகளில் வெகு குறைவு.நாட்டில் உள்ள 80% குறு விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் நன்மையை எங்களுக்கு அவர்களால் புரியவைக்க முடியவில்லை என்றார்.
சீக்கியர்களின் மத உணர்ச்சியும்,ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது..இது முழு விஷமாக மாறுவதற்கு முன்பு நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார்..இதில் மோடிக்கோ,பாஜகவுக்கோ எந்த நஷ்டமும் இல்லை.அவருடைய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்து கொண்டேதான் போகிறது..
ஆனால் இந்த அரசு தங்களுக்காக கொண்டு வந்த சட்டத்தை வலிமையாக ஆதரித்து,மோடியோடு திரள மறுத்த ஹிந்து விவசாயிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் பணியைச் செய்கிறார்கள்..ஜனநாயகத்தின் தடாகத்தில் பூத்த மலர்களின் சுகந்தத்தை அனுபவிக்க விரும்பாத மலசிக்கல்காரனாக அவர்களை திசைமாற்றுகிறது சுயலாப அரசியல்..
நரேந்திர மோடி நமக்காக நிற்கிறார்,இந்த தேசத்தின் முதுகெலும்பில் சூழ்ந்திருக்கும் வியாதியை அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறார்..அதை தள்ளிப் போட வைக்கும் குரூரம் பிடித்த எதிரிகளிடமே நாம் அதன் உடலை அடைக்கலம் வைக்க விரும்பினால் சரியா?
ஒரு குறுங்கிய குழு தனது போராட்டத்தால்,லாபியால்,கருத்துருவாக்கத்தால் இந்தியாவின் பெரும்பான்மை ஜனங்களின் அரசின் உள்நோக்கமற்ற நற்செயலை தடுத்து நிறுத்தியிருக்கிறது.இதற்கு என்ன காரணம்? நமக்கு திரளத் தெரியவில்லை,தலைமையை நம்புவதில் சந்தேகமும்,நடுநிலை என்று காயடிப்பு கோழைத்தனமும் வாட்டி வதைக்கிறது நம்மை..
நான் திரும்பவும் சொல்கிறேன்..நாடாளுமன்ற வெற்றி,ராணுவத்தை வைத்து மட்டுமே எல்லாவற்றையும் வென்றெடுத்துவிட முடியாது.நவீன உலகின் ஜனநாயக அலகு,போர் தந்திரம் எல்லாமே மாறிவிட்டன என்பதை நான் புரிந்துகொள்ள மறுத்தோமானால் சேதம் நமக்கு மட்டுமே.என்னை திட்டுவதன் மூலமாவது நீங்கள் ஒரு தரப்பாக மாறுவீர்களா? அதிலாவது நமது வலிமையை நிரூபிப்பீர்களா என்று தனது ஆதரவு தரப்புகளையே மோடி நோட்டம் விடுகிறார்..ஆனால் அதிலும் தெளிவில்லை..நிற்க.
பலர் உள்துறையின் மீது பழிபோடுகிறார்கள்..அமித்ஷாவுக்கு நிர்வாகம் தெரியவில்லை தோல்வியே நமது மந்திரமாக உள்ளது.ராஜ்நாத் சிங் சிறப்பாக செயல்பட்டார்,ஆனால் அமித்ஷாவுக்கு அனுபவமில்லை என்கிறார்கள்.இதிலும் நான் மாறுபடுகிறேன்.
2019 க்கு முன் உள்ள இந்தியா அல்ல இதுவென்பதை உணர மறுத்தால் நிலைமை புரியாது.2019 க்கு பிறகு 370 நீக்கம் - ராமர்கோவில் - முத்தலாக் - CAA - வேளாண்சட்டத்திற்கு பின்பும் இந்தியா இப்படி இருப்பதே நல்ல நிர்வாகத்தின் அறிகுறிதான்.ஒரு உள்நாட்டு கலகத்தை வலுவாக எல்லாவற்றையும் பயன்படுத்தி தேக்கியிருக்கிறார்கள் என்பதே உண்மை.
இதெல்லாம் ராஜ்நாத்சிங்கை வைத்துக் கொண்டு செய்ய முடியாது என்றில்லை.வெறும் அரசு நிர்வாகம் மட்டுமே போதுமானதில்லை இந்த சட்டங்களுக்கு பிறகான இந்தியாவை ஆள.அணிசேர்ப்பு,சமரசம் என பலதரப்பட்ட அரசியல் லாபத்தை ஏற்படுத்த வேண்டும்.அந்த விதத்தில் அமித்ஷா சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
தேசம் பதில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது என்பது உண்மை.ஆனால் இது எதிர்பார்த்த ஒன்றே..நாம் கருத்தியலாக திரளாத வரை,நமது நன்மைக்கு நிகழ்த்தப்படுபவற்றை இரண்டற்ற மனநிலையில் ஆதரிக்காத வரை நமது தோல்வி நம்மோடே வாழ்கிறது.பானிப்பட்டில் இருந்து தோற்றுக் கொண்டேதான் இருக்கிறோம்..
ஆனாலும் சிறுபோரில் தோற்பதே பெரும்போரை வெல்ல உதவியாக இருக்கும் என்ற வியூக தத்துவத்தை நம்புவோம்.குருநானக் ஜெயந்தி அன்றுதான் இந்திரா காந்தியின் பிறந்தநாளும்.அந்த நாளில் சீக்கியர்களின் போராட்டத்திற்கு மோடி கொடுத்த வெற்றி ஆழமான செய்தியை சொல்கிறது, ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜசோழன்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.