நாட்டில் எது நடந்தாலும் தங்களுக்கு கிடைத்த வெற்றி என அரசியல் கட்சிகள் சொந்தம் கொண்டாடி கொண்டுஇருக்கையில், எங்கு என்ன நடந்தாலும் அது திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி என்று அறிக்கை கொடுத்து கொண்டு திகுகவினரை காட்டிலும் அதிகம் முட்டு கொடுக்கிறார் கி. வீரமணி என நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் சென்று விவரமாக விவரித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி நேற்றைய தினம் புதிய வேளாண் சட்டதிருத்தம் மூன்றையும் ரத்து செய்ய இருப்பதாகவும் இதற்கான சட்ட திருத்தம் வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நிறைவேற்றப்படும் என நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார், இதற்கு பல்வேறு அமைப்புகளும் தங்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்து கொண்டு இருக்கையில் கி வீரமணியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்.,
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன விவசாயிகளுக்கு - மக்களாட்சிக்கு - நியாயத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! அறவழியில் போராடிய போராளிகளுக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள் எனவும்,
விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமான, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடி வருவதின் விளைவாக, மூன்று வேளாண் சட்டங்களும் பிரதமரால் இன்று (19.11.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று வந்துள்ள செய்தி, விவசாயிகளுக்கும், மக்களாட்சிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்
வெயில், மழை பாராது எடுத்த போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக ஓராண்டிற்கு மேலாக உறுதியாக அறவழியில் போராடிய போராளிகளுக்குப் பாராட்டும், வாழ்த்துகளும் அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும், இதனைத் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எதிர்த்து, ஆளும் கட்சியான பிறகும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய தி.மு.க. அரசுக்கும்,
இதனை எதிர்த்து இடைவிடாமல் அறப்போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் மக்கள் சக்திக்குமுன் எந்த ஆட்சியும் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். தேர்தல் அச்சம் உலுக்கிவிட்டது, இந்த சட்டங்களைக் கண்ணை மூடி ஆதரித்த சில கட்சியினரின் கண்கள் இனியாவது திறக்குமா என்பதே முக்கிய கேள்வியாகும் - பாடம் கற்கட்டும் அவர்கள்.
இதை முதலில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல தோல்வி பிரதமர் மோடி இந்த சட்டத்தை திரும்ப பெற்றது அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினால் அல்ல மேற்கொண்டு கலவரம் உயிர் சேதம் நிகழாமல் தடுக்க என்றும் முதலில் எது நடந்தாலும் முதல்வருக்கும், திமுகவிற்கும் கிடைத்த வெற்றி என சொல்வதை நிறுத்துங்கள், திமுக CAA சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியது, ஜம்மு காஸ்மீர் சிறப்பு சட்டம் ரத்து குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இதெல்லாம் மத்திய அரசு ரத்து செய்ததா இல்லையே?
உண்மையில் இது யார் கொடுத்த அழுத்தமும் அல்ல இந்தியாவில் இரு இனங்கள் இடையே மோதல் போக்கு நிகழாமல் தடுக்க பிரதமர் எடுத்த முடிவு இதிலும் அரசியல் செய்யாமல் முதலில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது போல் எப்போது தமிழக அரசு குறைக்கும் என சொல்லுங்கள் எனவும் நெட்டிசன்கள் வீரமணியை விவரமாக கேள்வி எழுப்பி விவரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.