கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
ஹிஜாப் அணிய அனுமதித்தால் நீங்கள் எங்களையும் காவி நிற உடை, துண்டு, ஷால் அணிய அனுமதிக்க வேண்டும் என இந்து மாணவிகள் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர் இதனால் கர்நாடக மாநிலமே கடும் அதிர்ச்சியில் இருக்கிறது இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் சுந்தர ராஜ சோழன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :
சீருடையைத் தாண்டி ஹிஜாப் அணிந்து வகுப்பறையில் அமருவதை உரிமை கோருவது ஒரு தரப்பு அப்படியானால் சீருடைக்கு மேலே காவித் துண்டு போட்டுக் கொண்டு அமரவும் எங்களுக்கு உரிமை தாருங்கள் என்று கேட்பது இன்னொரு தரப்பு..
இதில் ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவிப்பதை சமூகநீதி - நியாயம் - நடுநிலை என்றும்,காவித்துண்டுக்கு எதிராக பேசுவது அறமென்றும் பேசுகிறவன்தான் மிகுந்த ஆபத்தான அரசியல் போக்கை கொண்டவன்..
ஹிஜாபும் - காவித்துண்டும் எங்கள் உரிமை என்று கேட்கும் மாணவர்களை விட ஆபத்தான அரசியல் தரப்பாக மாறியிருப்பது இவர்கள்தான் பள்ளி,கல்லூரியில் எந்த மத அடையாளமும் தேவையில்லை என்ற நிலைப்பாடே சரியானது.
மாணவர்கள் மத,சாதி அடிப்படையில் பிளவுபடுவது மிகத்தவறு..சாதிக் கயிறுகள் கட்டக் கூடாது என்று பள்ளியில் தடைசெய்வதைக் கூட நான் ஆதரித்தேன்..அதே நிலைப்பாடுதான் இந்த விவகாரத்திலும் என குறிப்பிட்டுள்ளார் சோழன்.
More watch videos