கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் உட்கட்சி விவகாரம் மற்றும் எதிர் வர இருக்கும் நகர்மன்ற தேர்தல் தொடர்பாக தேவகோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி மற்றும் தேவகோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், தொகுதி எம்எல்ஏ மாங்குடி தேவகோட்டை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்வதே இல்லை. அவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார், கட்சியினர் உதவி கேட்டால் செய்வது இல்லை என்று கூறினார்.
உடனே கார்த்தி சிதம்பரம் எழுந்து அமைதியாக இருங்கள் பேசிக்கொள்ளுவோம் கூறினார், ஏற்கனவே தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவாகப் பிரிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் ஆரம்பிக்க, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முன்னாள் எம்எல்ஏ கே. ஆர். ராமசாமி சமாதனம் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு யாரும் கட்டுப்படவில்லை. அதற்கு மாறாக நாற்காலிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டார்கள். அதைப்பார்த்து அரங்கில் இருந்த பலரும் சிதறி ஓடிவிட்டார்கள்.
சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி ஆதரவாளர்களுக்கு அடி அதிகமாக விழ அவர்கள் கூட்டத்தை விட்டு ஓட முயற்சித்தனர், அப்போது சிலருக்கு மண்டை உடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது, தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் திமுக தயவால் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் வெற்றி பெற்ற ஒரு சில தொகுதிகளிலும் இரு பிரிவாக பிரிந்து மோதி கொள்வது அக்கட்சிக்கு பெரிய பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
என்ன நடந்தது இப்படி அடித்து கொள்கிறார்கள் என கார்த்தி சிதம்பரம் வேடிக்கை பார்த்த வீடியோ காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.