நாளுக்கு நாள் நெட்டிசன்களிடம் சிக்கி சிதைந்து கொண்டிருந்த செந்தில், நெட்டிசன்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதாக எண்ணி முழுமையாக செய்தி துறையில் இருந்து வெளியேறி சினிமா துறைக்கு மாறி அவ்வப்போது பிரபல தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக நடிப்பு காட்சிகளை வைத்து தனது சேனலை வளர்க்க பார்த்தார்.
ஆனால் இணையத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளானது செந்திலின் இந்த செய்கை, அரசியல் தலைவர்களை கிண்டல் செய்வதாக எண்ணி நடத்திய நாடாக காட்சிகள், ஐயோ பிரபல தொலைக்காட்சியில் நெறியாளராக வந்த செந்தில் இப்படி வேஷம் போட்டு நடிக்க கூடிய செயலுக்கு வந்துவிட்டாரே என பலரும் வேதனை பட்டனர்.
பொதுவான நபராக அரசியல் சார்பற்ற நபராக விவாதங்களையும், செய்திகளையும் செந்தில் எடுத்து சென்றிருந்தால் இந்த நிலை வந்துருக்குமா என பலரும் செந்திலின் சேனலின் கீழே கமெண்ட் செய்தார்கள், இந்நிலையில் நேற்று செந்தில் வெளியிட்ட வீடியோ கொஞ்சம் நஞ்சம் இருந்த அவரின் செய்தியாளர் பிம்பத்தையும் உடைத்துவிட்டது.
தான் சேனல் ஆரம்பித்த புதிய கட்டத்தில் வந்த வியூஸ்கல் இப்போது வருவதில்லை, முன்பு போல் பார்வையாளர்கள் இல்லை என ஆதங்கப்பட்டு இருக்கிறார், இந்நிலையில் தான் பார்வைக்காக மூன்றாம் தர யூடுப்பர்கள் செய்யும் செயலை செய்துள்ளார் செந்தில், அதாவது மோடி அரசாங்கம் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் செந்தில்.
அதில் மோடி குறித்து தலைப்பு வைத்திருந்தால் பார்வையாளர்கள் பார்க்க மாட்டார்கள் என எண்ணிய செந்தில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினி யார் தெரியுமா? என தம்ப்நைல் வைத்துள்ளார், இது செய்திக்கும் செந்தில் சொன்ன கருத்திற்கும் 100% பொருத்தமேயில்லை அதாவது தனது சேனலுக்கு மோடியை விமர்சனம் செய்தால் பார்வையாளர்கள் வருவது இல்லை என எண்ணி.,
மூன்றாம் தரமாக பெண்கள் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார் செந்தில், இதனை நெட்டிசன்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், உங்கள் அரசியல் நடவடிக்கைக்கும், நீங்கள் யாருக்கு ஜால்றா தூக்கவேண்டும் என்பதற்காக ஏன் தொகுப்பாளினி உட்பட பெண்களின் பெயரை புகைப்படத்தை பயன்படுத்துகிறீர்கள்.
கேள்வி சிம்பிள் மத்திய அரசின் அதிகாரிகள் குறித்து பேசுகிறீர்கள், பிரதமர் மோடியே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், அவரது அமைச்சர் செயலாளர்கள் குறித்து பேசுகிறீர்கள் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக இருக்கும் டாக்டர் L.முருகன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து MP யாக தேர்வு செய்துள்ளது பாஜக.
காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத அளவு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், தலித்கள் அதிக அளவில் அமைச்சர்களாகவும், MP MLA வாக உருவாக்கியுள்ள கட்சி பாஜக, உங்கள் சித்து விளையாட்டை அறிவாலயத்துடன் வைத்து கொள்ளுங்கள், ஏன் கடந்த 40 ஆண்டுகளில் திமுக தலைவராக எந்த குடும்பத்தினர் இருந்துள்ளனர் என புள்ளி விபரங்களை வெளியிட தயாரா? எனவும் செந்திலிடம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் . தான் ஒரு பத்திரிகை துறையை சார்ந்தவன் என்பதை மறந்து மோடி எதிர்ப்பு , திமுக ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக இறுதியில் செந்தில் எந்த நிலைக்கும் செல்வார் என பலர் கிண்டல் அடித்த சூழலில் பெண் தொகுப்பாளினிகள் சம்பளம் எவ்வளவு என தம்நைல் வைத்து தனது கருத்தை கொண்டு செல்லும் நிலைக்கு செந்தில் சென்று இருப்பது பலர் சொன்னபடி செந்தில் வந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . இன்னும் கீழ்பாக்கம் பக்கம் செல்வது மட்டுமே மிச்சம் எனவும் கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.