
இந்தியா எதிரி நாடுகளை விட உள்ளூரில் இருந்துகொண்டு இந்திய மண்ணில் வாழ்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் பதவி மோகத்தால் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள். தேசப்பற்று என்பது இந்தியாவில் உள்ளதாக என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.அவர்களால் நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது. பணத்திற்காகவும் அரசியலில் ஒட்டு வாங்குவதற்கு இந்தியாவை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்தரமாக பேசி நடந்து வருகிறார்கள். கேட்டால் பேச்சு சுதந்திரம் ஜனநாயக நாடு என கூறி தப்பித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.இதை அடக்கினால் போராட்டம் கலவரம் என நாட்டை சுடுகாடாக மாற்றி விடுவார்கள். இதற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவும் கொடுத்து வளர்த்து விடுவார்கள்.ஓட்டுக்காக இசுலாமியர் மற்றும் கிருஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டார் இதை யாரவது கேட்டால் சங்கிகள் என கூறுவார்கள் நடுநிலைவாதிகள் கை வையை பொத்திக் கொண்டு இருப்பார்கள். இது போல் தான் நடுநிலை பேசுகிறேன் என ஒருதரப்பிக்கு ஆதரவாக பேசி நாட்டை சீரழித்து வருகிறார்கள். நாட்டுபற்று என்பது முற்றிலும் குறைந்து விட்டது.
இதற்கிடையே நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். 22 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12பேர் காயமடைந்தனர்கள். இ இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாகிஸ்தானுடன் போருக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இதுபற்றி சித்தராமையா கூறியதாவது: நாங்கள் போருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. போர் என்பது இப்போது தேவையில்லை. காஷ்மீர் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாகிஸ்தானியர்கைள வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.சித்தராமையாவின் இந்த பேட்டியை பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா மக்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ராஜாக்கள் போல் உலா வருகின்றனர். முதலில் அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும். கன்னட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையின்றி நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மூக்கைநுழைக்க வேண்டாம்'' என்று சித்தராமையாவை கடுமையாக தாக்கி உள்ளார் பாஜக தலைவர்
அதேபோல் சித்தராமையாவின் இந்த கருத்து பற்றி கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நாங்கள் நாட்டை ஒன்றாக வைக்க விரும்புகிறோம். முதல்வர் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்தியா என்பது பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நிலைப்பாட்டை எனது கட்சி எடுத்துள்ளது’’ என்றார். இந்த நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்த சித்தராமையா, "பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. போரை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், நாம் நிச்சயமாக போருக்கு செல்ல வேண்டும்" பல்டி அடித்துள்ளார்.