Politics

மறக்க முடியா சம்பவம் செய்த இந்தியா..... லண்டனில் ஓடி ஒளிந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி ... உலகமே திரும்பி பார்த்த சம்பவம்..!

pmmodi
pmmodi

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ தளபதியின் குடும்பத்தினர் மற்றும் பல முக்கிய ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் பிடித்துளார்கள்.ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அண்மையில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு  தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கப்பல் படை வீரர், உளவுத்துறை அதிகாரி உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறிப்பாக மதத்தின் பெயரில் இந்த தாக்குதல்நடைபெற்றுளது. 


இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா அடுக்கடுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.இதில் முக்கியமானது வாட்டர் வார் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பாகிஸ்தான். ஒருபக்கம் பாகிஸ்தானின் முதுகெலும்பானா சிந்து நதி ஒப்பந்தம் ரத்து மறுபக்கம் ஜீலம் நதியில் தண்ணீர் திறப்பு என பாகிஸ்தானை வேறு வழியில் மிரட்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக எடுக்காத நடவடிக்கையை எடுத்துள்ளது இந்தியா. மேலும் இந்தியாவின் தாக்குதல் மிக உக்கிரமாக இருக்கும் என செய்திகள்வந்துள்ளது. 

இதனிடையே இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, விமானப்படை விமானங்கள் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் ஒழிந்திருந்தாலும், அவர்களை கண்டு பிடித்து அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இந்திய ராணுவமும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி அத்லஃப் லல்லியை பந்திபோராவில் அதிரடியாக சுட்டுக் கொன்றது. மேலும், இந்தத் தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகளின் வீடுகளை இந்திய ராணுவம் அதிரடியாக வெடி வைத்து தகர்த்தது.

இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளை பார்த்த பாகிஸ்தான் தனது நாட்டின் எல்லைப் பகுதியான ராவல்பிண்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய எல்லைகளில் ராணுவ ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியது. இதனால், இரு நாடுகளிடையே போர் மூளும் அபாய நிலை உருவாகியது.ராணுவ தளபதி குடும்பத்தினர் தப்பியோட்டம்இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்பதை உணர்ந்த அந்த நாட்டின் ராணுவ தளபதி ஆசீப் முனிர் தனது குடும்பத்தினரை விமானப் படை தளத்திலிருந்து தனியார் ஜெட் மூலம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தாராம். இதேபோல, பல முக்கிய ராணுவ அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினரை தனியார் ஜெட் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது இது உலகத்தியே திரும்பி பார்க்க வைத்துள்ளது போர் ஆரம்பிக்கும் முன்னரே ராணுவ தளபதி ஓடி ஒளிந்து சம்பவம் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது  உலகநாடுகளின் புருவங்கள் உயர்ந்துள்ளது .

இதனிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசீப் முனிர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, நம் நாடு இந்தியாவோடு இணைந்து இருந்ததை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது என்று கூறியது குறிப்பிடத் தக்கது.இந்தியாவின் நடவடிக்கைகளை பார்த்த பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததை பார்க்கும் போது, பாகிஸ்தான் பின்வாங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.