அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது ரெட்டிற்கு பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அவரை கைது செய்துள்ளனர் கைது செய்யும் பொழுது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அழுது ஆர்ப்பரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு, ராணுவ வீரர்கள் மற்றும் புழல் சிறையின் அதிகாரிகளின் காவலில் இருந்து வருகிறார். பிறகு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட புகார்களின் விசாரித்த நீதிபதிகள் அவரை 23ஆம் தேதி வரை அமலாக்க துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் எந்த நேரத்திலும் அவருக்கு காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி அமலாக்க துறையினர் கைது செய்த அன்றிலிருந்து திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர் அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிக மன உளைச்சலை கொடுத்ததாலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அமலாக்கத்துறை தங்கள் தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யும் பொழுது அவருக்கு வழங்கப்பட்ட மெமோவை அவர் வாங்க மறுத்துள்ளார் மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஆரோக்கியமாக நடை பயிற்சிக்கு சென்ற அவர் திடீரென கைது செய்யும் பொழுது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியையும் முன் வைத்தது. செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆக்ரோஷத்துடன் பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தார் அதுவும் அதில் நேரடியாக பாஜக மற்றும் அமலாக்க துறையை குற்றம் சாடியிருந்தார். இதற்கு பாஜகவினர் தங்களது எதிர்ப்புகளையும் அமலாக்கத்துறை மேற்கொண்ட நேரடியான நடவடிக்கைகளை பற்றியும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சீனிவாசன் தொலைக்காட்சி பேட்டியில், அமலாக்கத்துறை சோதனையை மேற்கொள்ளும் போது நேர்மையாக நின்று ஏன் பதில் அளிக்கவில்லை தன்னை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்தும் அவர் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை மருத்துவமனையில் எதற்கு கட்சிக்காரர்கள்? இதனை எப்படி மனித உரிமை மீறல் என்று சொல்கிறீர்கள்? என்று தங்கள் மீது திமுகவினர் போலியாக குற்றம் சுமத்தி செந்தில் பாலாஜியின் தவறை மறைக்க பார்க்கிறார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தினை டிவிட்டர் பதிவிலும் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் வரிசையில் பிரபல நடிகையும், சமூக செயல்பாட்டாளராக உள்ள நடிகை கஸ்தூரி இணைந்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது பற்றி ஒரு நகைச்சுவை கலந்த மற்றும் உள் அர்த்தங்கள் உடைய கருத்தை பதிவிட்டுள்ளார். புதிய பழமொழிகள்- கற்பனை, நான் நான் நானேதான் பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன!
முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே. இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும் என்று கஸ்தூரி பதிவிட்டு இருந்தது அன்றைய தினங்களில் ரெண்டாகிக் கொண்டிருந்தது.
நடிகை கஸ்தூரியின் இந்த பழமொழி ட்விட்டால் திமுகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல விமர்சனங்களையும் முன் வைத்தனர்.
திமுகவினர் பதிலடி கொடுத்தால் தனக்கு பதிலடி கொடுக்கத் தெரியாதா என்ற வகையில் நடிகை கஸ்தூரி அவர்களுக்கு மறுபடியும் தனது ட்விட்டர் பதிவில், கோர்ட்டில் அதட்டியதும் கைதை தவிர்க்க உடனே மன்னிப்பு கேட்பதை ஜெயிலுன்னு சொன்னாலே நெஞ்சை பிடித்து கொள்வதை போலீசை பார்த்ததும் அய்யோ கொல்றாங்கன்னு கத்துவதை வரலாறாக கொண்டவர்கள் வீர சாவர்க்கரை கோழை என்பதெல்லாம் என்று பதிவிட்டு திமுகவினருக்கு பதிலுக்கு பதில் கொடுத்து வருகிறார்.