நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலக அளவில் வெற்றியை படைத்து வருகிறது அதுமட்டுமில்லாமல் ஜெய்லர் திரைப்படத்தின் வசூல் இதுவரை எடுத்த படங்களை விட அதிக வசூலை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் பட வெற்றியை காண்பதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் சென்றார் இமயமலையில் உள்ள பாபா குகையில் அவர் தியானம் செய்த காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அருகில் உள்ள பல வழிபாட்டுத்தலங்ளான அமர்நாத் கேதார்நாத் பத்ரிநாத் முதலிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றுள்ளார் மேலும் நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உத்திரபிரதேச முதல்வரிடம் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது தற்போது அரசியல் தலைவர்களிடம் விமர்சனங்களாக எழுந்துள்ள நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெய்லர் திரைப்படத்தை இணைந்து பார்க்க போவதாக செய்திகள் வெளியானவுடன் ரசிகர்கள் அனைவரும் அதை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசினார்
ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நேரம் கிடைக்காததால் துணை முதலமைச்சர் மௌரியாவை ரஜினிகாந்த்வுடன் ஜெய்லர் படம் பார்ப்பதற்கு முதலமைச்சர் அனுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இ
தனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பாஜக மாநில ஆளுநர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்ததுடன் இதன் அரசியல் பின்னணி என்ன என்ற கேள்விகள் எழுந்து வருகிறது
மேலும் கிடைத்துள்ள செய்திகளை வைத்து பார்த்தால் பல தகவல்கள் வெளிவருகின்றன.நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் எடுக்க இருக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம் மேலும் இதுவே இவரது கடைசி படம் என்ற தகவலும் வெளிவந்துள்ள நிலையில் 2024 க்கு பின் தேர்தலில் அரசியலில் ஒரு முக்கிய பதவியை நோக்கி இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு கொண்டு வருகிறார்
என பல அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்துள்ளன அதாவது வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சி தொடர்ந்து 3 வது முறையாக அமையும் பட்சத்தில் எம்பி பதவி அல்லது மத்திய அரசின் உயரிய பதவிக்கு ரஜினிகாந்த் ஆசைப்பட்டு வருகிறார் எனவும் அதனால் தான் வட மாநிலங்களில் பாஜக தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் என்ற விமர்சனத்தையும் எதிர் கட்சிகள் முன்வைத்து பேசுகின்றனர்.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு செய்துவிட்டு பின்னர் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா காலம் ஆகியவற்றை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகினார் பின் ஏன் இப்போது பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார் என்றும் தமிழகத்தில் பாஜகவை நிலை நிறுத்துவதற்கு ரஜினியை வைத்து பாஜக முயற்சி செய்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இளையராஜா போல் எம்பி பதவியும் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லது இல கணேசன், தமிழிசை போன்று ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது அதனால்தான் நடிகர் ரஜினிகாந்த் தற்போது பாஜக அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாக அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை