Tamilnadu

"குசும்பு" தான்யா" என்ன சார் இப்படி பாட்டே போட்டு விட்டார்கள் வைரலாகும் டப்பிங் பாடல் !

ptr song
ptr song

மீம்ஸ், ட்ரோல் வீடியோ என நக்கலில் கருத்து தெரிவித்து வந்த நெட்டிசன்கள் இப்போது கிண்டலாக டப்பிங் பாடலே பாடி விட்டனர், அதிலும் லிரிக்ஸ் வாய்ஸ். என சினிமாவை மிஞ்சும் விதமாக பாடல் பாடி இருப்பது நெட்டிசன்களை மட்டுமல்ல, சாமானிய பொதுமக்களையும் கவர்ந்து உள்ளது.


மத்திய பாஜக அரசு பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலையை 10 ரூபாயும் குறைத்து தீபாவளி அன்று உத்தரவு பிறப்பித்தது இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் விலையை குறைந்தனர், இந்த சூழலில் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க படாமல் இருப்பது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி போன்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தற்போது வாய்ப்பு இல்லை என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நீண்ட விளக்க. அறிக்கை கொடுத்தார், அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த சூழலில் தற்போது நெட்டிசன்கள் பாட்டே போட்டு நிதி அமைச்சரின் அறிக்கையை ட்ரோல் செய்துள்ளனர்.

குறிப்பாக ஜெயம் படத்தில் வரும் பேமஸ் பாடலான நான் விட்டதெல்லாம் ரீலு பாடலை டப்பிங் செய்து, GST னு வந்தா இவர் வளைகாப்பு போகமாட்டார், குடும்ப பெருமை பேசி அவர் கடுப்பு ஏத்தமாட்டார், எப்போ சார்னு கேட்டா அவர் தேதி போடமாட்டார்,ய் இன்னொரு விஷயம் கேளு "அவர் விட்டதெல்லாம் ரீலு".... விலையை குறைப்போம்னு சொன்னவரே எப்போ குறைக்க போறீங்க சின்னவரே என அந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பாடல் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது, 40 நொடிகள் ஓடும் பாடலில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் தத்துவங்கள் அப்படியே பின்பற்ற படுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வைரலாகும் பாடலை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார். அது கீழே எம்பேட் செய்யப்பட்டுள்ளது.