ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் சூர்யா திரைப்பட குழுவின் முகத்திரையை கிழித்தது என்று ஒரு புறம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வரும் வேலையில் தற்போது காட்சி ஊடகத்துறையை சேர்ந்த நெறியாளர்கள் பலரது முக்திரையும் கிழிந்து வருவதாக பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியுள்ளன.
ஜெய்பீம் பட விவகாரத்தில் கருத்து சுதந்திரம் படைப்பு சுதந்திரம் என எங்களை கேள்வி எழுப்பும் நபர்கள் ஏன் கர்ணன் படத்தில் வருடத்தை மாற்ற சொன்னார்கள் என உதயநிதியை கேள்வி எழுப்பவில்லை என பாமகவை சேர்ந்த சூர்யா எழுப்பிய கேள்வி தனியார் ஊடகத்தில் அந்த விவாதத்தை தொகுத்து வழங்கிய தம்பி தமிழரசனை ஒரு நிமிடம் ஆட்டம் கான வைத்தது.
யாரெல்லாம் கர்ணன் திரைப்படத்தை படைப்பு சுதந்திரம் என கேள்வி எழுப்பினர்களோ அவர்கள் அனைவரும் எங்களை (பாமக ) கேள்வி எழுப்பலாம் என சூர்யா தெரிவித்த கருத்து கடும் அதிர்ச்சிவலைகளை உண்டாக்கியுள்ளது, அதற்கு தம்பி தமிழரசன் என்ன நீங்கள் டைரக்சன் செய்ய வேண்டாம் என தெரிவிக்க பதிலுக்கு சூர்யா நீங்கள் என்னை கேள்வி எழுப்பியது போல் நான் உங்களை கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் என எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் முன்பெல்லாம் ஊடகங்களில் நேரலை விவாதங்களில் பேசும் போது அடுத்த முறையும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று சில கருத்துக்களை பங்கேற்பாளர்கள் நெறியாளர்களை நோக்கி அமைதியாக எடுத்து வைப்பார்கள், ஆனால் இப்போது சமூக வலைத்தள காலம் என்பதால் வெட்டு ஒன்று துண்டு ஒன்று என நெறியாளரை நோக்கியே தங்கள் தரப்பு கேள்வியை எடுத்துவைத்து பதற செய்கிறார்கள்.
இதற்கு முன்னர் இதே போன்று வேறு சேனல் ஒன்றில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் யார் புகைப்படத்தை காலண்டரில் வைக்க வேண்டும் என நெறியாளர் சுகிதா எழுப்பிய கேள்விக்கு பாமகவை சேர்ந்த வினோபா, தொல். திருமாவளவன் போட்டோவை வைக்க வேண்டும் என கூறியதும் அதன் பிறகு நெறியாளர் பதறியதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் நெறியாளர்கள் தம்பி தமிழரசனோ அல்லது யாராக இருந்தாலும் இரண்டு தரப்பையும் முறையாக கேள்வி எழுப்பினால் மட்டுமே இனி வரும் காலங்களில் முறையாக கேள்வி கேட்டால் மட்டுமே இது போன்ற எதிர் கேள்விகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஒரு காலத்தில் "நியூஸ் ரீடராக"எப்படி சந்தோசமாக இருந்த தம்பி தமிழரசன் இப்போது நெறியாளராக சிக்கி சிதைந்து வருகிறாரே என மீம்ஸ்களும் பறந்து வருகின்றன. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.