Tamilnadu

கர்நாடக போன்று "தமிழ்நாட்டிலும்", இது அண்ணாமலையின் அண்டர் கவர் ஆபரேஷன்! ஆள் அனுப்பி கவனிக்கும் தமிழக அரசு !

annamalai ips
annamalai ips

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் ஆளும் கட்சியான திமுகவிற்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது, தமிழக அமைச்சர்கள் சிலர் அண்ணாமலை பெயரை கேட்டாலே அலற தொடங்கிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை அமைச்சர்கள் மீது தெரிவித்த ஊழல் புகார்கள் மற்றொருன்று அண்ணாமலை கொடுத்த பதிலடிகள்.


மின்சாரம் வாங்குவதில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்ய இருப்பதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மிக பெரிய டெண்டர் ஒன்றை கொடுக்க திரைமறைவில் வேலை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் அண்ணாமலை அதன் பிறகு பதறிக்கொண்டு பேட்டி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

இதன் பிறகு ப போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் வாங்குவதில் ஊழல் நடைபெற திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பனை நோக்கி கேள்வி எழுப்பினார் அண்ணாமலை அதன் பிறகு இனிப்புகள் வழங்க கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு அரசு நிறுவனமான ஆவினுக்கே டெண்டர் கொடுக்கப்பட்டது.

இதன் பிறகு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் என அண்ணாமலை கைகள் நீண்டன,  இப்படி பட்ட சூழலில்தான் அண்ணாமலையின் பயண திட்டங்கள், அண்ணாமலை சந்திக்கும் நபர்கள், அண்ணாமலையை சந்திக்கும் நபர்கள் என தினமும் மறைமுகமாக உளவு அமைப்பும், தனியார் ஏஜென்சி ஒன்றும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அண்ணாமலை தமிழகத்தில் உள்ள ஆதின மடாதிபதிகளை சந்தித்து வருவது, ஆளும் அரசாங்கத்திற்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில், பாஜக ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்ததில் மடாதிபதிகள் பங்கு முக்கியமானது, அதில் குறிப்பாக லிங்காயத்துக்கள் பங்கு முக்கியமாக அமைந்தது.

இந்த சூழலில்தான் தமிழகத்திலும் மடாதிபதிகளின் ஆதரவை திரட்ட அண்ணாமலை அனைத்து ஆதினங்களையும் சந்தித்து ஆசி பெற்று வருவதாகவும், உங்களின் ஆதரவு அரசியலில் இளையவனான எனக்கு வேண்டும் எனவும் அண்ணாமலை வேண்டுகோளாக வைத்து வருகிறாராம், ஆதினம் நினைத்தால் என்ன செய்ய முடியும் என்பது அரசியலில் உச்சபச்ச அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

அண்ணாமலையின் அனைத்து செயல்பாடுகளை ஆளும் கட்சியான திமுக கவனித்து வந்தாலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று நன்றாக தெரியும் எனவும் இது அண்ணாமலையின் அண்டர் கவர் ஆபரேஷன் என்கின்றனர், அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள்.