Cinema

"ஜெய்பீம்" சர்ச்சையை திசை திருப்ப சூர்யா குடும்பத்தின் நேற்றைய புது ஐடியாவும் புஸ்வானமானது !

Sivakumar and suriya
Sivakumar and suriya

 ஜெய்பீம் திரைப்படம் உண்டாக்கிய சர்ச்சையை திசை திருப்ப சூர்யா குடும்பம் பல்வேறு  புது வழிகளை கையாண்டு வருகிறது குறிப்பாக தங்களுக்கு ஆதரவாக திரை துறையினரை அறிக்கை கொடுக்க செய்தது, சில முன்னணி நடிகர்களை பேச வைத்தது, தங்களுக்கு ஆதரவாக ஊடகத்துறையில் உள்ள நபர்களை கொண்டு தங்கள் பக்க நியாயத்தை எடுத்து கூறியது என பல்வேறு முறைகளை கையாண்ட நிலையிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை மாறாக பிரச்சனை அதிகரித்தது தான் மிச்சம்.


இந்த சூழலில் தமிழகத்திலும் சரி உலக அளவிலும் சரி ஒரு விஷயத்தை மூடி மறைக்க வேண்டும் என்றால் விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் மக்கள் கவனத்தை மாற்ற வேண்டும் என எழுதப்படாத விதி உள்ளது, அதை தான் நேற்று செயல்படுத்தியது நடிகர் சூர்யா குடும்பம், அதாவது நேற்றைய தினம் பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்ட திருத்தங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, ஊடகங்கள் முதல் எதிர்க்கட்சிகள் வரை விவசாய சட்ட திருத்த மசோதா குறித்து விவாதம் செய்ய தொடங்கினர் அப்போதுதான் உள்ளே என்ட்ரியானர் சூர்யாவின் தம்பி கார்த்தி, அவர் "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது,

தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய  வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி விவசாயிகள் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க அதற்கு ஒரு தரப்பு ஆதரவு எனவும் எதிர்ப்பு எனவும் கிளம்பும் அதை வைத்து ஜெய்பீம் விவகாரத்தை திசை திருப்பி எப்படியாவது மடை மாற்றலாம் என கணக்கிட்டு செயல்பட்டுள்ளனர் சூர்யா குடும்பம் என்றும்.,ஆனால் கார்த்தியின் ட்விட்டர் பதிவு ஊடகங்களில் செய்தியானதே தவிர எந்த வித தாக்கத்தையும் பொது வெளியில் உண்டாக்காவில்லை.

மாறாக இயக்குனர் பாரதி ராஜாவிற்கு அன்புமணி பதில் கடிதம் எழுதி பல்வேறு சம்பவங்களை சுட்டி காட்டியிருக்கிறார், அத்துடன் இனி பிரச்சனை சுமுகமாக மாறுவது தங்கள் கையில் இல்லை எனவும் அன்புமணி கைவிரித்து இருப்பது சூர்யா தரப்பிற்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்த சூழலில் தான் மக்கள் கவனத்தை கார்த்தி மூலம் பிரதமர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்து மடை மாற்ற நினைத்த சூர்யா குடும்பத்தினரின் கடைசி ஆயுதமும் தோல்வி அடைந்து இருப்பதாக பார்க்கப்படுகிறது.

விரைவில் சூர்யா தனது திரைப்படம் தியேட்டரில் வெளிவரும் முன்பு வருத்தம் தெரிவித்தால் மட்டுமே   அவரது திரைப்படம் திரையரங்கில் வெளியாகும்  என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.